திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகே உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் மாலையில் ரஹ்மத்நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தமக்கு பழக்கமான மாணவருடன் தனியே பேசிக் கொண்டிருந்தாராம். இருவரும் தனியாக இருப்பதைப் பார்த்த சிலர் மாணவியை கடத்திச் சென்றுள்ளனர். மாணவி கடத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி ஆணையர் மாதவன் தலைமையிலான மாணவியைத் தேடி வந்தனர். இதனிடையே கடத்தப்பட்ட மாணவியை இன்று இரவில் மீட்டனர். கடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Popular Categories



