ரஜினி பேரவை – இணையதளம் தொடக்கம்; அரசியலுக்கான அச்சாரம்!

சினி நியூஸ்

ரஜினி பேரவை எனும் பெயரில் ஒரு இணையதளத்தை https://rajiniperavai.org தொடங்கியிருக்கிறார்கள். அதன் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!

என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கங்கள். இது நமது மக்கள் பணிக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட ஆக்கப்பூர்வ சேவை. நமதுஆடியோ, வீடியோ மற்றும் உரை சம்பந்தமான தொகுப்புக்களை இங்கே பார்க்கவோ, கேட்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். தங்களது கருத்துக்களை நீங்கள் இங்கு எழுதி வைக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ செய்யலாம். எமது ஊடக மேலாண்மைக்குழு தங்களது கருத்துக்களை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ந்து முடிந்தவரையில் உரிய பதிலை தங்களுக்கு வழங்கும். நமது இந்த முயற்சி வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

நன்றி! வணக்கம்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.