‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு UA சான்றிதழ்: கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்

Published:

viswaroopam 2 - 2026

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘விஸ்வரூபம். இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘விஸ்வரூபம் 2’ படம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தாமதமாகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கமல் முடித்தார்

இந்த நிலையில் நேற்று இந்த படம் தணிக்கைக்கு சென்றது. தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு UA சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img