விஜய் சேதுபதியை பார்க்க குவிந்த பொதுமக்கள் – அதிர்ச்சியில் படக்குழு

Published:

vijay

விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இருப்பதை தெரிந்துகொண்ட அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

sethu

கொரோனா ஊரடங்கு விதிப்படி படப்பிடிப்பில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் கூடிக்கொண்டே போவதால் அதிர்ச்சியான படக்குழு இதை எப்படி சமாளிப்பது எனத்திணறி வருகிறார்களாம். இறுதியாக போலீசார் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img