பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் ‘சல்பேட்டா’ : ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published:

salpetta

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு ‘சல்பேட்டா’ என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், ரஞ்சித் அதை இன்னும் உறுதி செய்யவில்லை. இப்படத்தில் ஆர்யாவோடு காளி வெங்கட், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தர்ஷா என்கிற புது முகம் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 2ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img