தனுஷின் 43வது படம்.. மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..

Published:

danush

நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தை முடித்துவிட்டார். அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், பாலிவுட் படமான ‘அத்ரங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை முடித்து விட்டு கார்த்திக் நரேன் இயகத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இது தனுஷின் 43வது திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘3 பாடல்கள் முடிந்துவிட்டது. 4வது பாடலை ரெக்கார்டிங் செய்து வருகிறேன். பாடல்கள் அருமையாக வந்துள்ளது. ஆல்பத்திற்காக தயாராக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img