April 19, 2025, 4:36 AM
29.2 C
Chennai

தீபாவளியில் திரைக்கு வரும் விஷாலின் ‘எனிமி’!

vishal arya film
vishal arya film

விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘ எனிமி’. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ்,மம்தா மோகன்தாஸ் ,தம்பி ராமையா , கருணாகரன் ,மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள் . பாடல்களை தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா .

படத்திற்கான பின்னணி இசையை சாம் CS இசையமைக்கிறார் . படத்தொகுப்பினை ரெய்மான்ட் டெரிக் க்ரஸ்ட்டா மேற்கொள்கிறர் . எனிமி படத்தின் டீசர் , ட்ரைலர் , பாடல்கள் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது .

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது …

நடிகர் விஷால்:, என்னுடைய நல்ல நண்பர் புனித் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முதலில் தயாரிப்பாளர் வினோத் குமார் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மிகப்பெரிய பலம் அவர்தான். அவர் நினைத்திருந்தால் இப்படத்தை OTT இல் வெளியிட்டு அதிக லாபத்தை பார்த்தீர்களாம் . திரையரங்கில் மக்கள் ரசிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார் .

இயக்குனர் ஆனந்த் ஷங்கருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா ஒரு ஒரு ஜாலியான மனிதர். கடின உழைப்பாளி படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் ஒரு பாக்ஸர் போல உண்மையாகவே என்னை அடித்துவிட்டார் அடுத்து அவருடன் நான் எப்போது படம் நடிப்பேன் என ஆவலாக உள்ளேன்.

ALSO READ:  பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

நடிகர் ஆர்யா : இப்படத்தைப் பற்றி என்னிடம் முதலிடம் கூறியவர் விஷால். கதை கேட்கும்படி சொன்னார் .நானும் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கேட்டவுடன் இரண்டு கதாபாத்திரங்களும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது .எந்த கதாபாத்திரத்தில் நடிப்பது என்று ஒரு குழப்பம் நிலவியது எனக்கு. படத்தில் எனக்காக சிறப்பு காட்சிகளும் மாஸ் காட்சிகள் அதிகமாக வைக்க சொல்லி விஷால் கூறியுள்ளார் .வேறு யாரும் இப்படி சொல்வார்களா என்று எனக்கு தெரியவில்லை . நன்றி.

க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை நானும் விஷாலும் பார்த்தோம் .இப்படி ஒரு காட்சி இனி எங்களால் மீண்டும் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் மிகப்பெரிய பலம் .இப்படத்தின் காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்க வேண்டியிருந்தது .கொரோனா காரணமாக எடுக்க முடியவில்லை .அதனால் துபாயில் படத்தை எடுக்க முடிவு செய்தார் .துபாயில் எடுத்தால் மூன்று மடங்கு செலவாகும் என தெரிந்தும் எடுக்க முன்வந்தார். தீபாவளிக்கு ரஜினி சாரின் படத்துடன் இப்படம் வெளியாகிறது .கண்டிப்பாக அனைவரும் திரையரங்குகளில் படத்தை பாருங்கள் நன்றி.

இயக்குனர் ஆனந்த் சங்கர்: எனது முந்தைய இரு படங்களில் பசங்களை விட இப்படத்தில் புதிய மாற்றத்தை உணர்வீர்கள். கண்டிப்பாக இந்த பாராட்டு ஷான் அவர்களுக்கு போய் சேரும். நடிகை மிர்னாலினி ரவி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் .அவர் டிக் டாக் வீடியோக்கள் நிறையவே பார்த்து ரசித்து இருக்கிறோம் .அவரால் கண்டிப்பாக நடிக்க முடியும் என்று நம்பி படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம் .அவர் டான்ஸர் கூட. இப்படத்தின் பாடல்களை தமன் இசையமைத்துள்ளார் பின்னணி இசையை சாம் சி எஸ் இசையமைத்துள்ளார் .கைதி, விக்ரம்வேதா படத்தின் பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்த பின்னணி இசை.

ALSO READ:  த்தூ... கோலிவுட்! த்தூ... டைரக்டர்ஸ்! த்தூ... நடிகர்கள்! சாபம் விடும் சமூகத்தள வாசிகள்!

அதனால் இப்படத்திற்கும் அவர்தான் பின்னணி இசை அமைக்க வேண்டும் என நினைத்தோம் .அதேபோல் எதிர்பார்ப்புகளை தாண்டி படத்தின் பின்னணி இசை அருமையாக வந்துள்ளது. இப்படம் சுலபமாக தற்போது வெளியேறுவதற்கு காரணம் தயாரிப்பாளர் வினோத் ,மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்தார் .அவர் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை. விஷால் சாருக்கு ஆக்சன் அதிக காட்சிகள் வைக்க வேணுடும் என்று பலர் கேட்டுக்கொண்டதால் அவருக்காக சில சிறப்பு ஆக்ஷன் காட்சிகளை படத்தில் வைத்துள்ளோம்.

ஆர்யா கடின உழைப்பாளி .மிகவும் எனர்ஜியான நடிகர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் RD சார் ஒளிப்பதிவுக்காக தனி பாராட்டைப் பெறுவார். தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் இப்படம் வெளியாகிறது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறோம்.

தயாரிப்பாளர் வினோத்குமார் : என் திரையுலக வாழ்க்கையில் நான் தனுஷ் சாருக்கு கடமைப்பட்டுள்ளேன் .அவருக்கு எனது முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி முழுமையாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஒப்படைத்தார் .அதன் மூலம் 14 படங்களை தயாரித்து . தயாரிப்பு ,தயாரிப்பு மேற்பார்வை ஆகியவற்றை முழுமையாக கற்றுக் கொண்டேன். அடுத்ததாக இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஷால் ,ஆர்யாவுக்கும் இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அதிக செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது ,அதற்கான ரிசல்ட் இப்படத்தின் வெளியீட்டில் தெரியும் என நினைக்கிறேன் .அனைவரது ஆதரவும் தேவை நன்றி.

vishal arya film3
vishal arya film3

நடிகை மிருணாளினி ரவி : எனது திரையுலக பயணத்தில் தொடக்க காலத்திலேயே இப்படி ஒரு மிகப்பெரிய படம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது .என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த ஆனந்த் ஷங்கர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் வினோத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விஷால் சார் அனுபவம் வாய்ந்த மிகப்பெரிய நடிகர். எனக்கு கூச்சமாக பயமாக தான் இருந்தது. ஆனால் எளிய மனிதரை போல் என்னிடம் பழகினார். ஆர்யா சாருடன் இணைந்து நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .எதிர்காலத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது .இப்படத்தில் அழகான பாடல்களை கொடுத்த தமன்அவர்களுக்கு நன்றி .தீபாவளிக்கு இப்படம் வெளியாவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

ALSO READ:  பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

வசனகர்த்தா ஷான் கருப்பசாமி : நோட்டா படத்துக்கு பிறகு ஆனந்த் சங்கருடன் இணைந்து பணி புரிந்துள்ளேன். இப்படத்தின் டீசரில் வரும் டயலாக்குகள் பாராட்டுக்களை பெற்றது. இப்படத்தில் ஒவ்வொரு ஆக்சன் சீன்கள் பின்னாலும் ஒரு எமோஷனல் இருக்கும். உளவியல் ரீதியாக பல வசனங்களை வைத்துள்ளோம் .வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

கலை இயக்குனர் ராமலிங்கம்: இந்த படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் என்று சொல்லலாம். எனது முயற்சியின் அடுத்தகட்ட நகர்வாக பார்க்கிறேன். இந்த படத்தில் ஹீரோவின் தந்தையின் கதாபாத்திரத்தின் பெயரை ராமலிங்கம் என எனது பெயரை இயக்குனர் வைத்துள்ளார் அதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் சிங்கப்பூர் செட்டை ஐதராபாத்தில் உருவாக்கினோம். இந்தப்படத்தில் பணி புரிய வாய்ப்பளித்த தயாரிப்பாளர் வினோத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இப்படத்திற்கு அவர் மிகப்பெரிய பலம்.

இசையமைப்பாளர் சாம் சி எஸ்: நோட்டா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக ஆனந்த் ஷங்கருடன் இணைந்து உள்ளேன் .இந்த படத்தில் லேட்டாகத்தான் இணைந்தேன். ஒரு உலகத்தரம் வாய்ந்த என்கின்ற வார்த்தையை நிரூபித்தவர் ஆனந்த் ஷங்கர். ஒரு படத்தின் கதைதான் அந்தப் படத்தின் பின்னணி இசையை தீர்மானிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. பின்னணி இசை நினைத்ததை விட அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories