ஆமா… அந்தப் பொண்ணு யாரு..?! தேவ் விமர்சகர்கள் வலைபோட்டு தேடுறாங்கோ!

நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் பலவித விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

ஆனால், தேவ் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பது கார்த்தியின் தோழியாக நடித்திருக்கும் அந்தப் பெண் யார் என்பது தான்.!

ராஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி நடித்து காதலர் தினமான இன்று வெளியாகியிருக்கும் படம் தேவ். முன்னர் கார்த்தி நடித்திருந்த ‘பையா’ படத்தில் பயணத்தை மையமாகக் கொண்டு ஊர் சுற்றி வந்த கதையைப் போல், இதுவும் ஊர் சுற்றி வரும் காதல் கதை என கூறப்பட்டது. எனவே, கார்த்தியுடன், நல்ல லொகேஷன்களையும் பார்த்து பிரமிக்கலாம் என்று ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தனர்.

இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்று படப்பிடிப்பை நடத்தினர். எனவே, ஏராளமான சாகச காட்சிகள் இப்படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் வெள்ளத்தில் எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு கார்த்தி நடித்து, வெளியாகும் படம் என்றெல்லாம் கூறி வந்தனர்.

ஆனால், டிவிட்டர் விமர்சனங்களைப் பார்க்கும் போது இப்படம் கார்த்தி ரசிகர்களை பெரிதாகக் கவரவில்லை என்று தோன்றுகிறது.

டிவிட்டரில் பலரும் தேவ் படம் குறித்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

படத்தின் காட்சிகளும் விஷுவல் எஃபக்டும் நன்றாக உள்ளன என்று கூறுகின்றனர். ஆனால், போர் அடிக்கும் திரைக்கதை, மிக மெதுவாக நகரும் கதை, இரண்டாம் பகுதி மிக மோசம் என்றெல்லாம் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. தேவை இல்லாத இடத்தில் வரும் பாடல் காட்சிகள், அதோடு கூட, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே கேட்டது போலவே இருக்கும் உணர்வு, எந்தப் புதுமையும் இல்லாதது என பல்வேறு விமர்சங்கள் உலா வருகின்றன.

தமிழ் தெலுங்கு என இரு தரப்பினரும் இந்தப் படத்துக்கு விமர்சனத்தை முன்வைத்து வருகினறனர். காதலர் தினத்துக்கு இப்படம் சிறப்பான விருந்து. நல்ல காதல் கதை என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...