ரஜினி, அஜித்துக்கு அப்புறம் எனக்குதான் ரசிகர்கள் அதிகம்…பவரின் பப்ளிசிட்டி ப்ளான்

Published:

Power Star Srinivasan5ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது முட்டாள் தனமான கருத்துகளை அவ்வப் போது கூறி வருவார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஒரு நடிகரை உயர்த்திப் பேசினால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அதை கிண்டலடித்துப் பேசுவார்கள். அதற்கு பதிலளித்து இந்த நடிகரின் ரசிகர்கள் ஸ்டேடஸ் போட என சமூக வலைத்தளங்களில் பவர் ஸ்டார் பெயர் உலா வரும். அதன்மூலம் பவருக்கு இலவச பப்ளிசிட்டி கிடைக்கும். எதைப் பற்றியெல்லாம் பேசினால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுவோம் என்று நன்கு தெரிந்து வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பரபரப்பாகப் பேசப்படுவது, பிரபல தொலைக்காட்சி நேற்று நடத்திய விருது வழங்கும் விழாதான். இந்த விருது வழங்கும் விழாவில் நடந்தவற்றை வைத்துதான், தற்போது பவர் ஸ்டார் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, யார் அவார்டு வாங்குறாங்கன்னு முக்கியம் இல்ல. யார் பேர சொன்னா விசில் சத்தம் கேக்குதுங்கறதுதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு, ரஜினி, அஜித் பெயரை அடுத்து இவருடைய பெயரைக் கூறியுள்ளார். புரியலையா… ரஜினி, அஜித்துக்கு அப்புறம் இவருடைய பெயர சொன்னாதான் அதிக கைத்தட்டல் கேட்கிறதாம்…

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img