![rs bharathi arrest](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2020/05/rs-bharathi-arrest.jpg?w=696&ssl=1)
பட்டியலின மக்கள் குறித்து மிக இழிவாகப் பேசி, அது குறித்த புகாரில் நேற்று கைதாகி உடனே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்ட திமுக., அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, திடீரென தமக்கு கொரோனா அறிகுறி உள்ளது என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தமக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுவாக, கைதாகும் சூழலில் நெஞ்சு வலிக்கிறது என்று கூறி,அதற்காக மருத்துவ வசதிகளைப் பெறுவது அரசியல் மட்டத்தில் வாடிக்கை. ஆனால், இவரோ, திடீரென கொரோனா அறிகுறி என்றதால்… இப்போது சில கேள்விகளை சமூகத் தளங்களில் கேட்டு வருகிறார்கள்.
அவை….
தனக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது என்று தெரிந்தும் தன் வீட்டில் இருபதிற்கும் மேற்பட்ட நபர்களை ஏன் வைத்திருந்தார்..?
கொரோனா அறிகுறி உள்ள நபரை எந்த ஒரு முக கவசங்களும், பாதுகாப்புமின்றி பேட்டி எடுக்க சென்றது ஏன்..?
ஆர் எஸ் பாரதி கைதாகும் பின் அவர் வீட்டில் இருந்த அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்தீர்களா..?
அவர் வீட்டை ஏன் இன்னும் தனிமை படுத்தாமல் இருக்கிறீர்கள்..?
அந்த வீட்டிலிருந்த நபர்களையும் அவரைப் பேட்டி எடுக்கச் சென்ற மீடியாக்களையும் ஏன் இன்னும் தனிமைப்படுத்த வில்லை..??