December 5, 2025, 9:42 PM
26.6 C
Chennai

குலமகளைத் தேடி கழியும் காலம்!

kukaiyur

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. குறைகூறும் அதிமேதாவிதனமும் இல்லை ..அறிவுரைகூறும் அளவிற்கு பெரியவனும்நான் இல்லை..அனைவரும் அறிவுஜீவியே..இருப்பினும் உண்மைநிலையை பகிரங்கமாக தெரியபடுத்தி மாற்ற முயற்ச்சித்துதானே ஆகவேண்டும் ..இப்பதிவால் என்மீது நமது சக சொந்தங்களால் கடுமையாக விமர்சனங்கள் வைக்கபடும்.தெரிந்தே எழுதுகிறேன். விமர்சனங்களை ஏற்க்க தயார்..

இன்று காலை எங்கள் நடக்கவே சிரமபட்டுகொண்டு வயதான அய்யங்கார் மாமி வந்தார்.யார் என தெங்களுக்கு தெரியவில்லை இருப்பினும் உள்ளே அழைத்து காபி கொடுத்து நீங்கள் யார் எண்ணவேண்டும் எனதுபெற்றோர் விசாரித்துகொண்டிருந்தனர்.அந்த வயதானமாமி விஷயத்தை சொல்லகூட முடியவில்லை கண்ணீர்பெருக்கெடுத்துஓடியது .. தாங்கள் அய்யங்கார் என்றும் தனக்கு வயது 65 என்றும் கணவருக்கு வயது 75 என்றும் தங்களுக்கு ஒரேமகன் 40 வயது என்றும் தனது மகன் பள்ளிபடிப்பே முடித்துள்ளதாகவும் கிராமத்தில் வைதீகம் பார்ப்பதாகவும் தங்களுக்கு வயதாகிவிட்டது வீட்டுவேலைசெய்ய சமைக்ககூடமுடியவில்லை. எங்களது மகனுக்கு பத்துவருடமாக பெண்தேடுகிறோம். மேட்ரிமோனியல் புரோக்கர் என்று இதுவரை ஒருலட்சம் வரைசெலவுசெய்துள்ளதாகவும், காசு பிடுங்குகிறார்களே தவிற ஒருவரனும் வரவில்லை. சுயம்வரம் ஜாதகபரிவர்த்தனை என்று கேள்விபட்டால் தமிழ்நாட்டில் எங்குநடந்தாலும் மகனையும் வயதான கணவரையும் அழைத்துகொண்டு சென்றுவிடுவேன் என்றும், எல்லாமேட்டிமோனியலும் பணபறிக்கிறார்கள் தவிற வரன்கிடைக்கவில்லையென்றும்,நம் வீட்டுபெண்களும், பெற்றோர்களும்,ஜயர் ,ஜயங்கார், மாத்வா உட்பிரிவு பார்ப்பதாகவும், பெண்களும் பெற்றோர்களும், மாப்பிள்ளை, BE, ME. MBBS, படித்திருக்கவேண்டும்,மிகவும் அழகாக இருக்கவேண்டும், வெளிநாட்டில் பணிபுரியவேண்டும், உள்ளூர் என்றால் IT யில் 50000 -முதல் 100000 -ஊதியம்வேண்டும் என்கிறார்கள் .பெற்றோர்களே மகளை இதுபோன்று ஊக்குவிக்கிறார்கள் .

மாப்பிளைவீட்டு குடும்பம் நல்லகுடும்பமா, கெட்டபழக்கங்கள் இல்லாத நல்ல மாப்பிள்ளையா , ஆசாரஅனுஷ்டானமான, போதிய வருமானமுள்ள மாப்பிள்ளைகளுக்கு( வைதீகம் புரோகிதம் அர்ச்சகர்) பெண்களை கொடுப்பதில்லை. மாற்று ஜாதியில் மாற்றுமததில் காதல் என்ற பெயரில் ஓடுவதற்கு வழிவகுப்பது பெற்றோர்கள் என்றார். உட்பிரிவு சம்மதம் கூனோ குருடோ விதவையோ பிராமிண்பெண்இருந்தால் கூறுங்கள் என்றார். எங்கெல்லாம் அக்ரஹாரம் மற்றும் பிராமிண் உள்ளார்களோ சுற்றுவட்டாரத்தில் 100 கிலோமீட்டருக்கு உள்ளதோ அங்கே விசாரித்து வீடுதேடி சென்று வரன்விசாரித்து வருவதாகவும் அதுபோல் உங்கள்ஊரில் அக்ரஹாரம் இருப்பதாகவும் பிராம்மணவீடு இருப்பதாகவும் கூறியதால் வந்தேன் என்றார். தனது மகனுக்கு பெண் கிடைக்கவில்லையே என்று கண்ணீர்விடாத அழுதுபுழம்பாத இறைவனிடம் வேண்டாத நாள் இல்லை என்றும்,. தனது
நிலையறிந்து விரக்தியில் தன்தாயிடாம் அம்மா வயதான காலத்தில் நீ ஊர் ஊராக வரன்தேடி போகாதே.. நாம் பிராம்மணகுலத்தில் பிறந்ததால் நமக்கு இந்த சாபம்.. எனக்கு திருமணம் ஆகாது.பெண் பார்க்கவேண்டாம். இருக்கும்வரை சந்தோசமாக இருந்துவிட்டது மூவரும் தற்கொலைபண்ணி இறந்துவிடலாம் என்றுகூறுவதாகவும் அந்த தாய்கூறினார்.எங்கள் வாம்சம் அழிந்துவிடகூடாது அதனால் நாம்மவா பெண் கிடைக்காவிடினும் பரவாயில்லை.நாங்கள் இறப்பதள்குள் எனது மகனுக்கு திருமணம் செய்துவைத்து கண்குளிர பார்க்கவேண்டும்.இந்த நிலை எந்த பிராம்மணருக்கும் வரகூடாது என்றார். என் மகனுக்கு அசைவம் சாப்பிடாத சைவ செட்டியார்,சைவ வெள்ளாளர் வீட்டு பெண் இருந்தால் சொல்லுங்கள் என்று அவர்கண்ணீர் வடித்து கூறியபோது நமது பிராம்மண சமுதாய அழிவிற்கு பிரச்சனைகளுக்கு நமது சமுதாய எதிரிகளைவிட நமது சமுதாய மக்களே நமது சமுதாய அழிவிற்கு ஒரு காரணம் என்றே உணர்கிறேன் .

பிராம்மணகுலத்தில் பிறந்ததால் ஆண்பிள்ளையை பெற்றதால் கண்ணீர்விட்டு கதறும் அந்த தாயை பார்க்கும்போது என்னால் வேதனையை துக்கத்தை நமது சமுதாய பெண்பிள்ளை பெற்ற சில பெற்றோர்களின் செயலை நினைக்கும்போது கோபம் கொப்பளிக்கிறது..

பெண்பிள்ளை பெற்ற பெற்றோர்களே, பிராம்மண சமுதாயம் அழிந்து கொண்டு வருவது தங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா..நமது பெண்களுக்கு ஆசார அனுஷ்டடானத்தை நமது குலபெருமையை சொல்லிகொடுங்கள். உறவினர்களோடு பழக உறவினர்கள் இல்ல விசேசத்திற்கு செல்லும்போது உடன் அழைத்து செல்லுங்கள். நமது கலாசாரம் பண்பாட்டை பார்க்கும்போதும் உறவினர்களோடு பழகும்போது நமது சமுதாயம் பழக்கவழக்கங்கள் ஆசார அனுஷ்டானங்கள் தெரிந்துகொள்ள உறவினர்களோடு அன்போடுபழக நம்வீட்டு பெண்கள் பாதைமாறி போய்விடாமல் நல்லவிசயங்களை கற்றுகொள்ளும் வாய்ப்புகிடைக்கும்.

மாப்பிளை பார்க்கும்போது நல்ல குடும்பமா, ஓரலவேனும் ஆசார அனுஷ்டானம் உள்ள குடும்பமா, மாப்பிள்ளை நல்ல பையனா, தீய பழக்க வழக்கங்கள் இல்லாத பையனா, குடும்த்தை அன்போடு மகிழ்ச்சியோடு நடத்தகூடிய வருமானம் உள்ளவனா என்றுபாருங்கள் . வைதீகம் அர்ச்சகர் புரோகிதர் கிராமம் என்று ஒதுக்கி சமுதாயஅழிவிற்கு காரணமாகி ஜென்ப பாபத்தை அனுபவிக்காதீர்கள்.உங்களின் செயல்பாட்டால் குணத்தால் பெண்களை சுதந்திரம் அதிகம்கொடுத்து மற்ற சமுதாய மத நபர்களிடம் பழக சுதந்த
திரம் கொடுப்பதும் முதலில் நட்பு பிரண்ட்ஸ் என்ற பெயரில் வீட்டிற்கு வருவதை பெண்கள் அங்கு செல்வதை அனுமதிப்பதும் அவரேகளுக்கு வசதியாகபோய்விடுகிறது.பெற்றோருக்கு சில விசயங்கள் ஆரம்பத்தில் தெரியும்போதே கண்டிக்கவேண்டும். எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .சிலகும்பல் பிராம்மணவீட்டு பெண்களை திட்டமிட்டு காதல்என்ற பெயரில் திட்டமிட்ட போலிநாடககாதல் செய்து நம்பெண்களின் மனதைமாற்றி வசியம்செய்து ஏமாற்றி மிரட்டி திருமணம்செய்கின்றனர்.இந்நிலை மாறவேண்டும் நமது சமுதாய பெண்களே பெண்ணை பெற்ற பெற்றோர்களே தயவுசெய்து நமது சமுதாய அழிவிற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர்கள்.

எனக்கு வரகூடிய பெரும்பாலான தொலைபேசி அழைப்புகள என்னிடம் பேசகூடிய. நமது சமுதாய பெற்றோர்கள் இளைஞர்கள் JP. என் பையனுக்கு வரன்சொல்லுங்க வரனைகிடைக்கலை எனக்கு முதல்ல திருமணத்திற்கு பெண்இருந்தா சொல்லுங்க ஜாதகபரிவர்த்தனை புரோக்கர்னு காசைபுடுங்கறதுதான் மிச்சம்.ஜாதி ஜாதின்னு சொல்ரீங்க நம்ம ஜாதிகாரனை முதல்ல நம்ம ஜாதிகாரனுக்கு பிரிவினைபார்க்காம பொன்னுதர சொல்லுங்க அண்ணே அப்புறம் நீங்க. எதிரிகளை எதிர்த்து போராடலாம் துரோகிகளை திருத்துங்க ஜாதியே இல்லாம போயிட்டுஇருக்கு முதல்ல இதுமாறினாலே நம்ம சமுதாயம் வளர்ச்சிபெறும் என்கிறார்கள்.முதல்ல இந்த உண்மையை தயங்காம யோசிக்காம எழுதுங்க அண்ணா என்கின்றனர். உண்மை பிரச்சனை இதுதான் என்று தெரிந்தும் எதிர்ப்புகளுக்காக உண்மையை கூறாமல் இருப்பது சரியில்ல. இந்த பிரச்சனை எனது குடும்பம் உறவினர்கள் குடும்பம் நமது சமுதாய மக்கள் அனைவரும் அனுபவித்த அனுபவிக்கும் பிரச்சனை. ஒற்றுமைன்னு ஒன்றுபடுத்துறேன்னு சொல்லிட்டு பிராம்மண சமுதாய கட்சி தலைவர் சக பிராம்மணர்களை பொதுதளத்தில் குற்றம்சாட்டலமா என்ற விமர்சனத்தை பற்றி கவலையில்லை.இதை பார்த்து உணர்ந்து ஒருசிலர் மாறினாலே சந்தோசம்தான் எனக்கு..

நமது சமுதாய இளைஞர்கள் நல்ல படிச்ச பட்டதாரி இளைஞர்கள் போன்பன்னி அண்ணா எனக்கு வேலை இருந்தா சொல்லுங்க உங்கள் பதிவுல நிறைய நம்மாளுங்க ஐசப்போர்ட் உதவுறோம் அப்படி இப்படின்னு போடுறாங்க எல்லாருமே VIPயா இருக்காங்க நம்ம சமுதாய பெரியவர்கள் தனியார் நிறுவனத்தில் உயர்அதிகாரியா இருப்பது 75./. நம்மாளுங்கதான்.ஆனால் உதவின்னுகேட்டா செய்யவிதில்லை. வேலைக்குரெகமண்டபண்ணமாட்ராங்க நாம அரசை எதிர்பார்க்ககூடவேண்டியதில்லை. சக பிராம்மணன் சக பிராம்மணருக்கு உதவினா ..சக பிராம்மணன்,சகபிராம்மணனை ஏழை,பணக்காரன், உட்பிரிவு பாகுபாடு பார்க்காமல் மதிச்சா..உதவினா..நம் சமுதாயத்திற்கு ஏன் இந்த நிலைமை.ஆயிரம் பிராம்மண விரோதிகள் வந்தாலும் நம் இனத்தை அழிக்கமுடியாது(பிராம்மண சொந்தங்களே உடனே சண்டைக்குவராதீங்க சிலர் உதவலாம் பலர் உதவுவதில்லை) இதுவே உண்மையென எனது கருத்து நீங்கள் பேசுவது தவறு எவ்வாறு இப்படிகுற்றசாட்டலாம் என எவ்வளவு பேசினாலும் இதுவே உண்மைநிலை மாறவேண்டும் என்பதே என்கருத்து.நாங்களும் மனிதன்தானே எங்களுக்கும் ஆசை பாசம் உணர்வு இருக்காதா இல்லறம் திருமணம் என்பிராம்மண சமுதாய இளைஞர்களுக்கு கனவோடு சரியா!! இறைவா என் சமுதாயத்திற்கு இத்துனை கஷ்டங்கள்.ஒரு பக்கம் அரசு அரசியல்வாதிகள் உரிமை சலுகைகளை பறித்ததோடு இல்லாமல் பிராம்மண சமுதாயத்தை அழிக்க திட்டமிட்டசதி கேளி கிண்டல் தாக்குதல் .உரிமை சலுகை மறுக்கபட்டு பாதுகாப்பற்ற சூழலில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக தமிழக பிராம்மணர்கள்.

பிராம்மணவிரோத கும்பல் பிராம்மண பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி வசியம்செய்து மிரட்டி நாடக காதல்செய்து பிராம்மண பெண்களை அபகரித்துவருகிறார்கள்.ஒரு பக்கம் சக பிராம்மணர்களே பெண்தராமல் ஆயிரம்குறைகூறி பிராம்மண இளைஞர்களின் குடும்பவாழ்க்கையை சீரழித்துவருகிறார்கள்.

என் பிராம்மண சமுதாய இளைஞர்கள் திருமணத்திற்கு பெண்கிடைக்காமல் தங்களது இல்லற வாழ்க்கை திருமண வாழ்க்கை கிடைக்காமல் லட்சகணக்கானபிராம்மண இளைஞர்கள் வாழ்க்கை சீரழிந்து வருகிறது.தனக்கு திருமணம் ஆகவில்லையே தனது மகனுக்கு பெண்கிடைக்கவில்லையே என்று பெற்றோரும் .தனது சகோதரனுக்கு பெண்கிடைக்கவில்லையே என்று சகோதர சகோதரிகளும். இறைவனிடம் வேண்டி கண்ணீர்விட்டு அழுகின்ற நிலை பார்க்கின்றபோது நம்இனம் விருத்திஆகாமல், வளர்ச்சிஅடையாமல்,இனம் அழிவைநோக்கி சென்று கொண்டுள்ளதே , அதனை தடுக்க இயலாத பிராம்மணணாய் உள்ளோமோ, என்கிற வேதனை துக்கம் ,ஏக்கம் ஆதங்கம் கோபம் கண்ணீராய் பெருக்கெடுத்து ஓடுகிறது

ராஜாளி. சீ .ஜெயபிரகாஷ்
வழக்கறிஞர் .
நிறுவனர் -தலைவர் .
அந்தணர் முன்னேற்ற கழகம்.9842044227.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories