
மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்: திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் சாலையை ஆக்கிரமித்து ஆற்றுபுறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கடைகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளது
முந்தைய ஆட்சியர் ஷில்பா அவர்கள் புதிய பாலம் அமைக்கும் போது ஆற்றின் கிழக்கு பக்கம் விநாயகர் கோவிலை அகற்ற காட்டிய தீவீரத்தை மேற்கு கரையிலுள்ள இந்தக் கடைகள் மீது காட்டவில்லை எனக் கூறப்படுகிறது
எப்போதோ அகற்றப்பட வேண்டியது. இப்போதாவது நடைபெற்றதே என மக்கள் மகிழ்ச்சி
அதெல்லாம் சரி அரசு அலுவலர் ஒன்றிய சங்க கட்டிடம் என்ற பெயரில் தனியார் வங்கிகளுக்கு வாடகை விடப்பட்டு ஒரு கட்டிடம்அதனை அடுத்து உள்ளதே… அது ஆக்கிரமிப்பு இல்லையா ?
அரசு ஊழியர் சங்க ஆக்கிரமிப்பிற்கு மட்டும் விதிவிலக்கா ? அரசு ஊழியர் சங்கம் என்ற பெயரில் அரசு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அரசு இடத்தில் கட்டிடம் கட்டி தனியாருக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது சரிதானா ?
இதற்கு எதிரே அரவிந்த் மருத்துவமனை அருகில் மேற்கு பக்கம் மற்றொரு வருவாய்துறை அரசு ஊழியர் சங்கம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டு பிளக்ஸ் போர்டு கடைக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதே ?
அரசு ஊழியர் சங்கங்கள் அரசு இடத்தில் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது எதனால் ?
சங்கம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட அரசு இடத்தை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களா? இது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் தர நெல்லை மாவட்ட வருவாய் துறை மறுப்பதன் மர்மம் என்ன?
இதனையும் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு கவனத்தில் கொண்டு நடவடிக்கை வேண்டும்!
- கா.குற்றாலநாதன்,
வழக்கறிஞர், நெல்லை