சோழவந்தான் துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்யுங்க!

புகார் பெட்டி மதுரை
madurai chozhavanthan sugathara nilayam

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்ய கிராம பொதுமக்கள் கோரிக்கை!

.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக துணை சுகாதார நிலையம் ஏற்படுத்தியுள்ளனர்.

இங்கு மகப்பேறு பரிசோதனை மகப்பேறு கவனிப்பு பார்ப்பதற்கான மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வசதிகளும் அவர்கள் பரிசோதனை செய்வதற்காக பெட் வசதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர் தங்குவதற்கு குடியிருக்கும் குடியிருப்புகள் உள்ளிட்டவை இணைந்து உள்ளது.

இந்த கிராமத்தைச்சுற்றியுள்ள எட்டு கிராமத்தைச்சேர்ந்த கிராமமக்கள் இந்த துணைசுகாதார நிலையத்தை பயன்படுத்திவந்தனர். தற்போது சுமார் இருபது ஆண்டு காலமாக இந்த துணை சுகாதார நிலையத்திற்கு கிராம மக்கள் வருவதைத் தவிர்த்தனர்.

ஏனென்றால் இந்த சுகாதார சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாததால் ஒரே ஒரு செவிலியர் மற்றும் வந்திருந்து முதலுதவி செய்து வருகிறார்.இதனால் இப்பகுதி கிராம மக்கள் இந்த துணை சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்து டாக்டர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்

.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது எங்கள் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் ஆரம்பித்தனர்.இங்கே எங்கள்கிராமம் உட்பட சுற்றியுள்ள எட்டு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த துணை சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்

ஆனால் கடந்த .20 ஆண்டுகாலமாக துணை சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் வருகை குறைந்தது.இதனால் இங்கு மருத்துவ உதவியாளர்கள் தங்குவது இல்லை. காலப்போக்கில் இங்குள்ள கட்டிடம் இடிந்து பெயரளவில் உள்ளது.

மேலும் இந்தப் பகுதியில் அதிக அளவு விவசாயம் செய்வதால் . விவசாய வேலைகள் செய்யும் போது திடீரென்று பூச்சிக்கடி ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்வதற்கு சோழவந்தான் அல்லது மதுரை செல்ல வேண்டி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்

ஆகையால் இந்த துணை சுகாதார நிலையத்தை பராமரித்து மருத்துவர்கள் செவிலியர்கள் உதவியாளர்கள் உட்பட அனைவரும் இங்கு தங்கி பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.