spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் ... கொரோனா உலக அரசியல்!

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கும் … கொரோனா உலக அரசியல்!

china india
china india

கடந்த சில வாரங்களில் பில் கேட்ஸ், டாக்டர் அந்தோனி ஃபௌசி இமெயில்கள, ஊஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி என பல விஷயங்களும் எக்ஸ்போஸ் ஆக துவங்கியிருக்கின்றன…! சீன ஊஹான் விவகாரம் முடிவுக்கு வருகிறதா

முதல் மாற்றம்….

2020இல் ஊஹான் பற்றிய கட்டுரைகளை அமெரிக்க ஊடகங்கள் தவிர்த்தன. முகநூலும் ட்விட்டரும் அவற்றுக்கு தடைவிதித்தன. ஆனால் 2021இல் அமெரிக்க ஊடகங்கள் ஊஹான் வைரஸ் பற்றி பல கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றன. முகநூலும் ட்விட்டரும் அவற்றுக்கு தடைவிதிக்கவில்லை இப்போது. (https://tinyurl.com/3yjuxtsb).

அடுத்த மாற்றம்…

இது வரை சீனாவை காத்து வந்த பைடனும் “அந்த வைரஸ் பற்றி ஆராய்ந்து 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க” தன் அட்மினுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஏற்கனவே டிரம்ப் – பாம்பேயோ அமைத்த குழு தன் அறிக்கையை சமர்ப்பிக்கு முன் அந்த குழுவை கலைத்து, தான் ஒரு குழு அமைத்து, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அழித்தாடுகிறார் பைடன். இது என்ன கபட நாடகம்? (https://tinyurl.com/3ehxrkyd & https://tinyurl.com/5x4bavzv, https://tinyurl.com/7f4tzkz3 )

ஏனிந்த மாற்றம்…? – 1

சில தினங்களுக்கு முன், பிரிட்டிஷ் புரபசர் Angus Dalgleish & நார்வேயின் விஞ்ஞானி Dr. Birger Sørensen இருவரும் சேர்ந்து 22 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்கள். அதில், “கொரோனாவைர்ரஸ் இயற்கையானதல்ல, ஊஹான் இன்ஸ்டிட்யூட்டில் உருவானது” என ஆதாரங்களை வெளியிட்டிருப்பது இந்த கூட்டத்துக்கு பிரச்சினையை அதிகரித்துள்ளது (https://tinyurl.com/ysuu2utf).

ஏனிந்த மாற்றம்…? – 2

இரு தினங்களுக்கு முன், காத்தரீன் என்பவர் வெளியிட்டுள்ள 44 பக்க கட்டுரை (https://tinyurl.com/2zute7rx) கொரோனாவைரஸ் விவகாரத்தின் பல விவரங்களையும் சேர்த்து தந்துள்ளது.

இந்த விவகாரத்தை ஆரம்பத்திலேயே டாக்டர் ஃபௌசி கைத்தடிகள் பீட்டர் தாஸ்ஸாக்க்கும், கிறிஸ்டியன் ஆண்டர்சனும் கட்டுரைகள் எழுதி அடக்கினாலும், DRASTIC என்ற தன்னார்வ குழு (Decentralized Radical Autonomous Search Team Investigating COVID-19) ஊடகங்கள் / ஃபௌசி கூட்ட விளகக்த்தில் திருப்தியடையாமல் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர்.

அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 20களில் இருக்கும் ஒருவர் (@TheSeeker268) இந்த எக்ஸ்போசேயில் முக்கிய பணியாற்றியுள்ளார்.

இவர் (TheSeeker268) பிரச்சினைக்கு காரணம் RaTG13 வைரஸ் தான் என தீர்மானித்தார். அதற்கு காரணம், இதன் மரபணு குறியீடு (genetic code) வௌவால் மனுஷி ஷி ஜெங்-லி வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிட்ட வைரசின் மரபணு குறியீடோடு ஒத்திருந்தது. 2012இல் யூனான் குகையில் மூவர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அவர்கள் பூஞ்சை தொற்றால் (fungal infection) இறந்தனர் என அறிவித்தார் ஷி ஜெங்-லி. அந்த அறிவிப்பில் திருப்திப்படாத TheSeeker268 தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்தார். அதிர்ஷ்ட்வசமாக சீனாவின் ஆய்வறிக்கைகள் அடங்கிய CNKI வலைதளம் அவருக்கு பேருதவியாக அமைந்தது. அதில் (கூகுள் டிரான்ஸ்லேட்டை உபயோகித்து) தேடியதில் சீன மாணவர் ஒருவரின் 2013 ஆய்வறிக்கையில் “அந்த யூனான் குகையில் இறந்தவர்கள் கொரோனாவைரஸ் தாக்கி இறந்தார்கள்” என்ற விவரம் கிடைத்தது. அதைக் கொண்டு, ஊஹான் இன்ஸ்டிட்யூட்டில் தான் இது உருவாக்கப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்களை குவித்துள்ளனர் DRASTIC குழுவினர்! பாராட்டுகள் DRASTIC & TheSeeker268!

யாரிந்த டாக்டர் ஃபௌசி?

கதையின் முக்கியப் புள்ளி – டாக்டர் ஃபௌசி! National Institute of Allergy and Infectious Diseases NIAIDஇன் தலைவர் டாக்டர் ஃபௌசி! இதே ஃபௌசிதான் 1984 முதல் – ரோனால்டு ரீகனில் ஆரம்பித்து இன்றைய பைடன் வரை – அமெரிக்க ஜனாதிபதிகளின் அட்வைசர். NIAID பல பில்லியன்கள் புழங்கும் அமைப்பு. அத்தனையும் அமெரிக்கர்களின் வரிப்பணம். அந்த பில்லியன்களுக்கு சொந்தக்காரர் இல்லாவிட்டாலும், ஃபௌசி கொடுத்தால் தான் பல ஆய்வுகள் நடக்கும். எனவே, ஃபௌசியை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது.

இப்போது இவருக்கு சிக்கல் ஆரம்பித்திருக்கிறது. இவரது இமெயில்களை தகவலறியும் சட்டம் மூலம் பெற்றுள்ளனர். அதில் இவரது இன்னொரு முகம் வெளியாகியுள்ளது. (https://twitter.com/SharriMarkson/status/1399941686579523588 , https://www.documentcloud.org/documents/20793561-leopold-nih-foia-anthony-fauci-emails#document/p2286 )

சமீபகாலம் வரை, “கொரோனா வைரஸ் இயற்கையானதே” என்று சொல்லிவந்த இந்த மனிதர் இப்போது, “ஆய்வகத்திலிருந்து கசிந்திருக்கலாம்” என்கிறார்.

“இவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என ஒரு புறம் கோரிக்கை எழுப்புகிறார்கள. “ஊஹான் விவகாரம் பற்றி அத்தனையும் தெரிந்திருந்தும் மக்களை ஏமாற்றி விட்டார். பரவலை தடுக்க தவறினார். பலரது மரணத்துக்கு காரணமானார். இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.” என இன்னொரு புறம் குரல் கிளம்பியுள்ளது.

செனட்டர் ராண்ட் பவுல் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார் ஃபௌசி @ https://youtu.be/JSt7ls2zIoY . இப்போது இமெயில்களும் மேலும் பல ஆதாரங்களும் வெளியான நிலையில் ஃபௌசியை மீண்டும் செனட்டுக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்கிறார் இவர்.

தங்களுக்கும் ஃபௌசிக்கும் உள்ள தொடர்புகளை மறைக்க துவங்கியுள்ளது சீனா. தன் வலைதளங்களில் ஃபௌசி – ஊஹான் தொடர்பு விவரங்களை அழித்து வருகிறது. என்றாலும் அவற்றை ஆர்க்கைவ் செய்துள்ளார்கள் பலர். தடையங்களை மறைக்க முடியாது.

கொரோனா வைரஸ் வரலாறு: ஊஹானில் என்ன செய்தார்கள்?

கொரோனா வைரஸ் SARS-CoV-2 / SARS2 தொறு டிசம்பர் 2019இல் வெளியானபோது, அதை “ஊஹானின் இறைச்சி சந்தையிலிருந்து வந்ததாக” சீனா அறிவித்தது.

ஆனால், “அது ஊஹானின் இறைச்சி சந்தையிலிருந்து வந்ததா அல்லது ஊஹான் பரிசோதனை சாலையிலிருந்து (Wuhan Institute of Virology WIV) வந்ததா?” என நிகோலாஸ் வேட் என்ற நிருபர் (முன்னாள் நியூயார்க் டைம்ஸ் நிருபர்) முதலில் கேள்வி எழுப்பினார் – (https://tinyurl.com/2sdwszzr ) .

2002இல் சார்ஸ் வைரஸ் (SARS1) வௌவாலிலிருந்து சிவெட் (civets) மிருகங்களுக்கு பரவி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவியதையும்,

2012இல் வௌவால்களிலிருந்து மெர்ஸ் (MERS) தொற்று ஒட்டகங்களுக்கு பரவி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவியதையும் தழுவி…

சீனா, “ஊஹான் வௌவால்களிலிருந்து SARS2 வைரஸ் மனிதர்களுக்கு பரவியிருக்கலாம்” என அறிவிக்க…

அதை சர்வதேச ஊடகங்களும் கேள்வி கேட்காமல் பரப்பினர்.

(பொதுவாக வௌவால் வைரஸ் நேரடியாக மனிதனை தாக்குவதில்லை. வேறு மிருகத்துக்கு சென்று அங்கிருந்து மனிதனுக்கு பரவுவதாக சொல்கிறார் நிகோலாஸ் வேட்).

1, “ஊஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியில் கொரோனா வைரஸ் ஆய்வு நடைபெறுவதால், அங்கிருந்து வந்திருக்க வாய்ப்பு” என சந்தேகம் எழுப்பியவர்களை வாயடைக்கும் வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற லான்சட் (Lancet) ‘மருத்துவ’ இதழில், “கொரோனா வைரஸ் இயற்கையிலேயே உருவானது என்பதை மறுத்து பேசுவோரை வன்மையாக கண்டிக்கிறோம்” என பீட்டர் தாஸ்ஸாக் (Peter Daszak) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பிப்ரவரி 2020இல் கட்டுரை வெளியிட்டனர். (இந்த பீட்டர் தாஸ்ஸாக் இந்த கட்டுரையின் முக்கியமான புள்ளிகளில் ஒருவர்).

வைரஸ் வெளியானது: டிசம்பர் 2019.
பீட்டர் குழு கண்டனம்: பிப் 2020.

இரண்டே மாதங்களில், “அது இயற்கையான வைரஸ்” என அறுதியிட்டு கூறினர் மேல்தட்டு விஞ்ஞானிகள் மேல்தட்டு இதழான லான்சட்டில்!

(இதே மருத்துவ இதழ் லான்சட் அவ்வப்போது மோதி விரோத ‘அரசியல்’ கட்டுரைகள் வெளியிடுகிறது. அவற்றை எழுதுவோர் சீனர்கள்).

2, பிப்ரவரி 2020இல் வெளிவந்த இந்த லான்சட் / பீட்டர் கட்டுரையால் பலரும் குரலெழுப்ப தயங்கிய வேளையில், மார்ச் 2020இல் மேலும் ஒரு கட்டுரை கிறிஸ்டியன் ஜி. ஆண்டர்சன் (Kristian G. Andersen) தலைமையில் ஐந்து மேல்தட்டு வைராலஜிஸ்டுகள் கட்டுரை வெளியிட்டனர். அதில், “இந்த கொரோனா வைரஸ் SARS2 ஆய்வகத்திலிருந்து வந்ததில்லை” என மீண்டும் வலியுறுத்தினர்.

டிசம்பரில் வெளியான வைரஸ் பற்றி மேல்தட்டு விஞ்ஞானிகளும் வைராலஜிஸ்ட்டுகளும் இப்படி கருத்து கூறியதால், இதை எதிர்த்து பேச பலரும் தயங்கினர். சீன அடிமை ஊடகங்கள் ஜால்ரா போட்டனர். டெமாக்ரட்டுகள் ‘சீனர்களை கட்டிப்பிடித்து’ தங்கள் சீன விசுவாசத்தை காட்டினர்.

*** அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “இது ஊஹான் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து வந்தது. சீனர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை” என்று கூற, வைரஸ் பற்றி ஆராயாமல், அவரை தாக்க துவங்கினர். ***

மேலே சொன்ன இரண்டு கட்டுரைகளும் இந்த வைரஸ் பற்றி விஞ்ஞானிகளும், வைராலஜிஸ்ட்டுகளும், மக்களும் பேச விடாமல் தடுத்தன.

பேசினால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களது ஆராய்ச்சிகளுக்கு மானியம் தடுக்கப்படும். எனவே அமைதியானார்கள்.

மக்களை வாயடைக்க செய்யும் சீனாவின் நோக்கம் நிறைவேறியது.

3, பிப்ரவரி 2021இல் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஒரு குழுவை அனுப்பி இந்த வைரஸ் பற்றி ‘விசாரித்தது’. அந்த குழுவின் தலைவனும் இதே பீட்டர் தாஸ்ஸாக் தான். சீனா சென்று வந்த குழு, “கொரோனா வைரஸ் இயற்கையானது தான்” என்ற பாட்டையே மீண்டும் பாடியது.

“சார்ஸ்1, மெர்ஸ் வைரஸ் எங்கிருந்து வந்தது? அதை எப்படி கையாள்வது / சரிசெய்வது?” என்பதை நான்கே மாதங்களில் கண்டறிந்த உலகத்தால் 15 மாதங்களாகியும் சார்ஸ்2 (கொரோனாவைரஸ்) எங்கிருந்து வந்தது, எப்படி கையாளுவது என்பது தெரியவில்லையே ஏன்? என கேட்கிறார் நிகோலாஸ் வேட்!

“சரி…. வைரஸ்களை மாற்றியமைப்பதால் வைராலஜிஸ்ட்டுகளுக்கு என்ன லாபம்? இது என்ன விபரீத விளையாட்டு” என்ற கேள்விக்கு பதில்: மாற்றியமைத்த வைரைஸ்களை கொண்டு மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தி அதற்கான சிகிச்சையையும் கண்டு பிடிப்பது. தொற்று வரும் முன்னரே மருந்து கண்டு பிடிப்பது.

இந்த விபரீத பரிசோதனை செய்த டோமர்களால் மருந்து கண்டு பிடிக்க முடியாததால் இன்று லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்பது கொடுமையான உண்மை!

இப்படி மாற்றியமைத்து விளைவுகளை ஆராயும் இந்த பரிசோதனையை “பயன்பாட்டு சோதனைகள்” (gain-of-function experiments) என்றழைக்கிறார்கள்.

கொரோனா வைரஸின் கோளமான வெளிப்புறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் புரதம் (spike protein) எந்த உயிரியை தாக்கும் என்பதை தீர்மானிக்கிறது. (With coronaviruses, there was particular interest in the spike proteins, which jut out all around the spherical surface of the virus and pretty much determine which species of animal it will target). 2000இல், நெதர்லாந்து வைராலஜிஸ்ட்டுகள், இந்த புரதத்தை (spike protein) மாற்றியமைத்ததன் விளைவாக அந்த கொரோனாவைரஸ் பூனைகளை மட்டும் தாக்கும் திறன் கொண்டதாக மாறியது.

பூனையை வெற்றிகரமாக தாக்கும் வைரஸை உருவாக்கியவர்கள், மனிதர்களை தாக்கும் வகையை உருவாக்க முடிவு செய்தனர்.

சீனாவின் ஊஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி WIVஇன் தலைவி ‘வௌவால் பெண்மணி’ (Bat Lady) என்றழைக்கப்படும் ஷி ஜெங்-லி (Shi Zheng-li) இந்த வௌவால் வைரஸ்களை யூனான் குகைகளில் (Yunnan) இருந்த வௌவால்களிலிருந்து சேகரித்து வந்தார். ஷி ஜெங்-லி அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ரால்ஃப் பாரிக்குடன் (Ralph S. Baric) சேர்ந்து ஆய்வுகள் நடத்திவந்தார்.

2015இல் மனிதர்களை தாக்கும் வைரஸை (SHC014-CoV) இவர்களிருவரும் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வை பலரும் அப்போது கண்டித்தனர், “இந்த வைரஸ் ஆய்வகத்திலிருந்து தப்பினால் விளைவுகள் விபரீதமாகும்” என.

என்றாலும், ஷி ஜெங்-லியும் ரால்ஃப் பாரிக்கும், “இந்த ஆய்வால் விளையும் நண்மைகளை கருத்தில் கொள்ளுங்கள்” என்று கூறி தங்கள் செயலை நியாயப்படுத்தினர்.

இந்த இருவரும், ஊஹான் இன்ஸ்டிட்யூட்டில் பரிசோதனையை தொடர்ந்தனர். ‘எலியில் மனித செல்களை வளர வைத்து பரிசோதிக்கும் முறையை’ வௌவால் மனிஷி ஷி ஜெங்-லிக்கு கற்றுக் கொடுத்தார் ரால்ஃப் பாரிக். மனிதனை தாக்குவதற்கு பதில், மனித செல்களை கொண்ட எலிகளை தாக்கி பரிசோதனை தொடர்ந்தது. (These laboratory mice, a cheap and ethical stand-in for human subjects, are genetically engineered to carry the human version of a protein).

அமெரிக்கர் ரால்ஃப் பாரிக்கிடமிருந்து டெக்னிக்கை கற்ற ஷி ஜெங்-லி சீனாவின் ஊஹான் இன்ஸ்டிட்யூட்டில் ஆய்வுகளை தொடர, அதற்கு பண உதவி செய்தது அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (National Institute of Allergy and Infectious Diseases NIAID). இந்த அமெரிக்க அமெரிக்க NIAID நிர்வாகம் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் (US National Institutes of Health NIH) கீழ் இயங்கும் அமைப்பு. (இதன் தலைவர் டாக்டர் ஃபௌசி).

இந்த ஆய்வுக்கான NIAID – NIH மானியம் பீட்டர் தாஸ்ஸாக்கின் ஈக்கோ ஹெல்த் அலயன்ஸுக்கு (EcoHealth Alliance) வழங்கப்பட்டது. பீட்டர் தாஸ்ஸாக் அதை ஷி ஜெங்-லிக்கு வழங்கினார். (எனவே, அமெரிக்காவின் NIAID – NIH நேரடியாக தலையிடவில்லை என கைகழுவிக் கொள்ளலாம்).

கவனிக்கவும்: ஊஹான் பரிசோதனைக்கு பணம் கொடுத்தது பீட்டர் தாஸ்ஸாக். அதே பீட்டர் தாஸ்ஸாக்தான் வைரஸ் பிரச்சினை ஆரம்பத்தில், “இது இயற்கையான் வைரஸ்” என லான்சட்டில் கட்டுரை எழுதி மற்றவர்கள் வாயை அடைத்தார். இதே பீட்டர் தாஸ்ஸாக்தான் உலக சுகாதார அமைப்பு கமிட்டிக்கு தலைமை தாங்கி பிப் 2021இல் சீனா சென்று, “ஊகான் இன்ஸ்டிட்ட்யூட் இஸ் வெரி க்ளீன்” என சான்றிதழ் கொடுத்தவர்!

ஊஹான் இன்ஸ்டிட்யூட் பற்றியும், கொரோனா வைரஸ் ஆய்வுகள் பற்றியும் பீட்டர் தாஸ்ஸாக் பெருமையாக பேசிய காணொளிகள் பொதுவெளியில் உள்ளன.

டிசம்பர் 2019இல் ஒரு நேர்காணலில், “வைரஸ் தாக்குவது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான தடுப்பு மருந்து இன்னும் இல்லை” என்று கூற, “தடுப்பு மருந்து இல்லை என்கிறீர்களே? என்ன செய்வீர்கள்?” என்று கேள்வி கேட்க, “அது கடினமில்லை. கொரோனாவைரசை எளிதில் மாற்றியமைக்கலாம். ரால்ஃப் பாரிக்குக்கு அது தெரியும். தடுப்பு மருந்து செய்வோம்” என்று பதிலளித்திருக்கிறார். (கத்திரிக்காய் விற்பவர் கூட எச்சரிக்கையுடன் பேசுவார். பீட்டர்…?)

இந்த கட்டுரையை முழுதும் படிக்க: https://tinyurl.com/2sdwszzr .

குறிப்பு: இந்த ஆய்வு பற்றி தெரிந்ததும் அப்போதைய ஜனாதிபதி ஒபாமா அந்த மானியத்தை நிறுத்தியதாக செய்தி.

May 5, 2021 Nicholas Wade – The origin of COVID: https://tinyurl.com/2sdwszzr

February 19, 2020 – Statement in support of the scientists, public health professionals, and medical professionals of China combatting COVID-19
https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736%2820%2930418-9/fulltext

17 March 2020 – The proximal origin of SARS-CoV-2 https://www.nature.com/articles/s41591-020-0820-9

COVID Lab Leak: Dr. Anthony Fauci Under Fire For Funding Gain-of-Function Research At Wuhan Institute Of Virology
https://swarajyamag.com/news-brief/covid-lab-leak-dr-anthony-fauci-under-fire-for-funding-gain-of-function-research-at-wuhan-institute-of-virology

Watch my exchange with Dr. Fauci in today’s HELP Hearing. https://youtu.be/JSt7ls2zIoY

Escape from Wuhan: Coronavirus lab leak theory gains traction: the theory is now scorching public discourse with renewed attention on some of the holy cows of the US scientific establishment including Fauci – to have funded the dangerous research.
https://timesofindia.indiatimes.com/world/us/escape-from-wuhan-coronavirus-lab-leak-theory-gains-traction/articleshow/82803832.cms

Fauci Flip Flops On COVID Origins, Now ‘Not Convinced’ Virus Developed Naturally.
https://thenationalpulse.com/breaking/fauci-flip-flops-on-covid-origins/

Biden shut down effort to prove theory COVID originated from Wuhan lab
https://tinyurl.com/3ehxrkyd

Biden orders closer review of Covid origins as U.S. intel weighs Wuhan lab leak theory
https://tinyurl.com/5x4bavzv

EXCLUSIVE: COVID-19 ‘has NO credible natural ancestor’ and WAS created by Chinese scientists who then tried to cover their tracks with ‘retro-engineering’ to make it seem like it naturally arose from bats, explosive new study claims
https://tinyurl.com/ysuu2utf

The Lab-Leak Theory: Inside the Fight to Uncover COVID-19’s Origins – Katherine Eban
https://www.vanityfair.com/news/2021/06/the-lab-leak-theory-inside-the-fight-to-uncover-covid-19s-origins

  • கட்டுரைத் தொகுப்பு: செல்வ நாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe