
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மேம்பாடுகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அதி நவீன வளர்ச்சி காரணமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காணொலி காட்சி வாயிலாக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.
இந்த சூழ்நிலையில் தங்களுடைய கவனக்குறைவு காரணமாக நாம் பயன்படுத்தும் மின் சாதனங்களை முறையாக நாம் பயன்படுத்துவதில்லை.
மொபைல் போன் சார்ஜ் போடும் போது பலர் நிறைய விஷயங்களை மறந்து விடுவதுண்டு.
சிலவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு மொபைல் சார்ஜர் போடுவது நல்லது. மொபைல் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான பொருள்.
அது இல்லை என்றால் அனைவருக்கும் கை உடைந்தது போல் இருக்கும். ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஸ்மார்ட்போன் சார்ஜ் போடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
முதலில் வயர்லெஸ் சார்ஜரை பயன்படுத்த வேண்டாம். விரைவாக சார்ஜ் செய்ய கேபிள் சார்ஜர்தான் பெட்டர். இதேபோல் USB சார்ஜரும் வேலைக்கு ஆகாது. வேறு வழியே இல்லாதபோது இதுபோன்ற சார்ஜரை பயன்படுத்தலாமே தவிர, விரைவாக சார்ஜ் ஏற வேண்டும் என்றால் சுவற்றில் இருக்கும் பிளக் மூலம் சார்ஜ் ஏற்றுங்கள்
ஸ்பீட் சார்ஜரை தேர்வு செய்யுங்கள்
தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட் போன் உடனும் விரைவாக சார்ஜ் செய்யும் சார்ஜர்கள் இணைக்கபட்டிருக்கும். இல்லாவிடில் ஸ்பீட் சார்ஜரை கடையில் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்
லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் சார்ஜ் செய்ய வேண்டாம். ஒரு ஸ்மார்ட்போனுக்கு தேவையான மின்சாரத்தை இவை கொடுக்க வாய்ப்பில்லை. எனவே சுவற்றில் பதிவு செய்யப்பட்ட பிளக்கில் மட்டுமே சார்ஜ் செய்யுங்கள்
சுவிட்ச் ஆப் செஞ்சா ரொம்ப நல்லது
முடிந்தால் சார்ஜ் செய்யும்போது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சார்ஜில் போடுங்கள். அல்லது அட்லீஸ்ட் ஏர்பிளேன் மோடில் வைத்தாவது சார்ஜ் போடுங்கள். ஆனால் முக்கியமான அழைப்போ அல்லது தகவலோ வரவேண்டிய நிலை இருந்தால் இவற்றை நீங்கள் தவிர்த்துவிடலாம்.
நீங்கள் உங்கள் மொபைல் போனை சார்ஜ் போடும் முன்னர் கண்டிப்பாக ஏர்பிளேன் மோடுக்கு மாற்ற வேண்டும். ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்வதால் உங்கள் போனில் உள்ள வயர்லெஸ் ரேடியோ உள்பட பல இணைப்புகளை கட் செய்துவிடும்.
ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் பவர் சேவிங் மோட் என்ற ஆப்ஷன் இருக்கும். நீங்கள் இதை ஆன் செய்தால் உங்கள் மொபைல் போனில் உள்ள சார்ஜ் கெப்பாசிட்டி பாதுகாக்கப்படும்.
தேவையில்லாததை தூக்குங்கள்
மேலும் உங்கள் போன் சார்ஜில் இருக்கும்போது வைஃபை, ஜிபிஎஸ், புளுடூத் ஆகியவற்றை ஆஃப் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் மொபைல் போனில் ஏறும் சார்ஜை இவைகள் சாப்பிட்டுவிடும் அபாயம் உள்ளது.
சிறியவர் முதல் பெரியவர் வரை சார்ஜ் போட அனைவரது கையிலும் கண்டிப்பாக பவர் பேங்க் இருக்கும். தரமான பிராண்ட்களை பயன்படுத்துவது மொபைலில் இருக்கும் பேட்டரிக்கு பாதுகாப்பு.
அதேபோல் பவர் பேங்கில் சார்ஜ் போட்டிருக்கும் போது ஹெட்போன் பயன்படுத்த கூடாது. மொபைல் கவரை கழட்டாமல் சார்ஜ் போட வேண்டாம். தூங்கும் முன் கண்டிப்பாக மொபைல் போனை சார்ஜ் போட்டு விட்டு தூங்க வேண்டாம். அதிக நேரம் போன் பிளக் பாயிண்டில் இருந்தால் பேட்டரியின் தரம் போய்விடும்.
15% இருக்கும்போது போனை சார்ஜ் போடுவது நல்லது. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனபிறகு சார்ஜ் போட வேண்டாம். அதற்காக சிறிது நேரம் சார்ஜ் போட்டுவிட்டு எடுத்துவிடலாம் என்று 20 அல்லது 30 சதவீதம் உடனே எடுக்க வேண்டாம்.
குறைந்தது 80 சதவீத ஜார்ஜுடன் போனை பயன்படுத்துங்கள். ஏதாவது ஓபன் ஆக வைத்து இருந்தால் அதனையும் ஆப் செய்துவிட்டு சார்ஜர் போடவும். இல்லையென்றால் சார்ஜ் ஆவதற்கு தாமதமாகும், பேட்டரியும் வீணாகும் நீண்டநாளுக்கு வராது. காசு கொடுத்து மொபைல் வாங்குவதை விட அதை பாதுகாத்து வைப்பதே அதைவிட முக்கியம்.