இராமலிங்கப்பெருமானார் ஆன வள்ளல் அடிகளுக்கு விபூதி பூசக்கூடாது என ஒரு கும்பல் கிளம்யிருக்கிறது.
ஏழெட்டு வருடங்களாக இந்த கும்பல் இப்படி செய்துவந்தாலும் சமீபகாலமாக வடலூர் நிலையங்களை கைப்பற்றிக்கொண்ட இந்த கும்பல்
வள்ளல் அடிகளுக்கு திருநீறு முதலிய சிவசின்னங்கள் ஏதுமிலாத படத்தை வெளியிட்டு வருகிறது.
கேட்டால் அடிகள் உருவ வழிபாட்டை எதிர்த்தார், திருநீறு அணியக்கூடாது என சொன்னார் என்கிறதுகள்.
உருவ வழிபாடு கூடாது என்றால் இதுகள் எதுக்கு வடலூரிலேயே படம் போட்டு பிரிண்ட் செய்து பிரேம் போட்டு தருகிறதுகள்?
ஞான சபையிலே ஜோதி வழிபாடு மட்டும் தான் தகும் என்றால் இதுகள் ஜோதியை மட்டும் படமாக அச்சிட்டு வெளியிடவேண்டியது தானே?
எதுக்கு திருநீறு பூசாமல் பாழ் நெற்றியோடு இருக்கும் அடிகள் படித்து அச்சிட்டு வெளியிடுகிறதுகள்?
அடிகள் அருளிய நித்திய கரும விதி களிலே முதல் விதியே எழுந்தவுடன் நீறு தரிக்கவேண்டும் என்பது தான்.
சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.
காலையில் இளம் வெய்யில் தேகத்திற் படாதபடி, பொழுது விடிந்து 5 நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும். பின்பு வெய்யிலில் நெடுநேரம் தேகமெலிவு வரத்தக்க உழைப்பையெடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந்தோன்ற முயலுதல் வேண்டும். பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.
இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் – இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.
- சிறப்பு விதி
- நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல்.
- எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.
இப்படி கரும விதிகளிலே முதல் விதியாக காலை எழுந்தவுடனே நீறு பூசும் படி பணித்திருக்கும் அடிகள் நீறை விட்டாராம்.
இதிலே அரசியல் வேறு.
இன்னும் கொஞ்ச நாள் போனால் வள்ளல் அடிகள் சிவனை வழிபடவில்லை அவரு வழிபட்டது ஏதோ ஒரு சாமி அது உருவ வழிபாடு இல்லாத அந்த குறிப்பிட்ட மதம் தான் என முடிச்சிடுவானுகளோ?
வழக்கம்போல தமிழக அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட படம் என சொல்லிடலாம்.
திருவொற்றியூர் தியாகேசப்பெருமானை குறித்து எழுத்தறியும் பெருமான் மாலை பாடியிருக்கிறார். நாளைக்கு அதையும் அழித்துவிடும்களோ?
இப்படியாக ஒவ்வொருவராக இந்து இல்லை என பிரிக்குதுகளாம்.
சைவம் இந்து இல்லை வைணவம் இந்து இல்லை அப்புறம் சைவமே சைவம் இல்லைன்னு போவுமாம்.
நடத்துங்க நடத்துங்க
ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
ஈசனே நீயும் கோவிலுக்குள்ளே இல்லாமல் போனாயோ என அடிகள் அன்று அரற்றி அழுததை எம்மீசன் கேட்காமலா போய்விடுவான்?
~ ராஜா சங்கர்
வீபூதியை அழிப்பதால் ஹிந்துமதத்தை அழித்துவிடப்போவதாக நினைத்து குதுகலிக்கும் நாளை அழியவிருக்கும் கூட்டம்.
வள்ளுவருக்கு அழித்தார்கள் அது கற்பனை ஓவியம் என்றனர். ஒழிந்து போகட்டும் என்றுவாளாவியிருந்தோம்…
நீறில்லா நெற்றி பாழ் என்ற ஔவைக்கு அழித்தனர்…
எப்போதும் குங்குமப் பொட்டுடன் விளங்கிய சாக்தன் பாரதிக்கும் அழித்தனர்.
திருநீறு அணியும் முறை காலம் அனைத்தையும் எழுதிய இராமலிங்க அடிகளாருக்கும் அழித்தனர்.
செக்யூலர் என்பது அரசாட்சியுடன் இருக்க வேண்டும். மதத்தில் புகுந்தால் மண்டையில் போட வேண்டும். புத்திக்கெட்ட பதர்களாய் தமிழன் இருக்கும் வரை இவர்கள் அராஜகம் தொடரும்.
இந்த இழிந்த. குணமுடைய மூடர்களை வாக்கு கேட்டு வரும் போது துரத்தி அடிக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் விட்டால் உன் நெற்றியில் கை வைக்க அதிக நாள் ஆகாது.
முதலில் உனக்கு சொரணை வேண்டும். நெற்றியில் நீறோ, திருமண்ணோ , சந்தனமோ வைத்தால் கேலி பேசுபவனிடம் கேள் அவன் தரிக்கும் அடையாளங்களை ஏன் என்று.
இவர்கள் இங்கு இந்துத்வாவை இன்ஸ்டால் செய்யாமல் விடமாட்டார்கள் .
~ வாசு ராமதுரை