பகவான் பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் சமயத்தில்,
அச்ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் I
அஸதித்யுச்யதே பாத்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ II
என்று ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறினார்.
அது என்னவென்றால், “ஸ்ரத்தை இல்லாமல் செய்யப்படும் யாகமோ, தானமோ, தவமோ ஒருவிதமான பலனையும் கொடுக்காது” என்பதேயாகும்.
இதிலிருந்து, பகவானே ஸ்ரத்தைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.
அதனால் நாம் செய்யக்கூடிய காரியம் ஸ்ரத்தையோடு கூடியிருந்தால் அதற்குப் பலன் உத்க்ருஷ்டமானது (உயர்வானது).
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்