நெல்லையில், மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில் அருகே, கிறிஸ்துவ கல்லறை கட்டும் வன்மத்தால், அந்தப் பகுதியில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்த படங்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்நிலையில், அசம்பாவிதம் நேராமல் தடுக்க நெல்லை மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு, தொடர்புடைய கட்டுமானத்தை அப்புறப்படுத்தினர்.
இருப்பினும் இது குறித்த பழைய படங்கள் தற்போதும் வாட்ஸ் அப் வாயிலாக பரப்பப் பட்டு வருகின்றன. இதனால் இதைக் காணும் பலர் கொந்தளிப்பு மன நிலைக்குச் சென்று விடுகின்றனர். கடந்த மாதமே இது குறித்த காவல் துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரம், இது போன்று வாட்ஸ் அப்பில் பரப்புபவர்களுக்கு தெரியவரவில்லை.
இந்தப் பிரச்னை சற்று மோசமானதுதான்…! கடந்த மாதம், இது குறித்து காவல் துறைக்குச் சென்ற புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. பிரச்னைக்கு உள்ளான இடம், அதை ஒட்டிய கோவில், அவ்வளவு சாதாரணமானதல்ல.!
நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கே விநாயகப் பெருமானுக்கு தனி ஆலயம் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் மூலவராக வீற்றிருப்பவர் விநாயகப்பெருமான். நீலசரஸ்வதியைத் தம் மடியில் அமர்த்தியபடி காட்சி தருகிறார். விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் 8வது வடிவமாகப் போற்றப்படும் உச்சிஷ்ட கணபதியாக இத்தலத்தில் விநாயகப் பெருமான் திகழ்கிறார். சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவில், ஆசியாவிலேயே ராஜ கோபுரத்துடன் தனி மூலவராக விநாயகர் வீற்றிருக்கும் மிகச் சில ஆலயங்களில் பெரிதாகத் திகழ்கிறது.
தேவியை மடியில் அமர்த்தி, துதிக்கையை தேவியின் மீது வைத்தபடி திகழும் விநாயகரின் உச்சிஷ்ட கணபதி கோலத்தை நாம் பல ஆலயங்களில் தரிசிக்க முடியும். ஆனால், அந்த கணபதியே மூலவராக அமைந்திருக்கிற ஆலயம் என்றால், இதனைத்தான் பளிச்செனக் கூற இயலும். அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்கிறது மணிமூர்த்தீஸ்வரம்.
இங்கே ஆலயத்தின் உள்பிராகாரத்தில் மூலவரைச் சுற்றி வல்லப கணபதி, சக்தி கணபதி, ருணஹரண கணபதி, ஹரித்ரா கணபதி, சித்திபுத்தி கணபதி, சர்வசக்தி கணபதி, குஷி கணபதி, சந்தானலட்சுமி கணபதி, ஸ்வர்ண கணபதி, விஜய கணபதி, அர்க கணபதி, வீர கணபதி, சங்கட ஹர கணபதி, துர்கா கணபதி, ஹேரம்ப கணபதி, குரு கணபதி என 16 வகையான விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
இந்தக் கோயிலுக்கு மேலும் ஒரு சிறப்பும் உண்டு. தேவியைத் தம் மடியிலே அமர்த்தி வைத்து அருள்பாலிக்கும் வடிவமுள்ள விநாயகர் திருவுருவங்கள் உள்ள வல்லப கணபதி, சக்தி கணபதி, சந்தான லட்சுமி கணபதி, சங்கடஹர கணபதி மற்றும் இரு தேவியரை மடியிலே வைத்துள்ள சித்தி புத்தி கணபதி என 5 விநாயகப் பெருமானின் திருவுருவங்களையும் நாம் இந்த ஒரே கோயிலில் காண முடியும் என்பதுதான் அந்தச் சிறப்பு.
இப்படி மிகச் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள இடம்தான் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே கிறிஸ்துவ இடுகாடு கட்ட்டப்பட்டது. இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில், மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, பிரச்னையின் தீவிரத்தை தற்காலிகமாகக் குறைத்து வைத்தது.
#ReclaimTemples