மக்கள் நீதி மய்யத்தில் இருந்து, தற்போது கோடைக்காலம் என்பதால் தண்ணீர் பந்தல்கள் அமைக்கக் கூறியிருந்தார்களாம். இதனால் நகரில் ஆங்காங்கே, ம.நீ.ம., கொடிகளுடன் சாலை ஓரம் பந்தல்கள் அமைத்து, நீர் மோர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து வந்தார்கள்.
இந்நிலையில், சென்னையில் ஒரு பெண்மணி தாம், ம.நீ.மய்யத்தின் தண்ணீர்ப் பந்தலுக்குச் சென்றுவிட்டு வந்த அனுபவத்தை இப்படி விவரித்திருக்கிறார் வாட்ஸ்அப் வழியில்!
வெயிலுக்கு தண்ணீர் பந்தல் போட்டிருந்தாங்க…எட்டிப்பாத்தா…நன்னாரி சர்பத்..நீர் மோர்…தர்பூசணி பழங்கள் சிறிது சிறியதாக வெட்டி வைக்கப் பட்டு இருந்தது…அலுவலக நிமித்தமாக வங்கிக்கு சென்று கொண்டிருந்த நானும் என் தோழியும்.டூ வீலரை நிப்பாட்டி விட்டு..நின்றோம்…எங்களைக் கண்டு உள்ளே இருந்தவர்கள்…ஐந்து நிமிடம் மேடம் என்றனர்…நானும்.என் தோழியும் போகும்.வழியில் ஏதேனும்.ஜூஸ் குடிக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்…சரி…இலவசமாகக் கிடைக்கிறதே ஐந்து நிமிடம் நின்றால் தவறில்லை என்று நினைத்து நின்றோம்…அவர்களாக வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்கள்…போட்டோவுக்குள் சிக்காமல் நானும் என் தோழியும் டபாய்த்துக் கொண்டிருந்தோம்.( வந்திருப்பது அலுவலக வேலை…அதிகாரிகளுக்குத் தெரிந்தால் எங்கள் கதி என்னாவது என்ற பயமே காரணம்)
20 நிமிஷம் ஆச்சுங்க…அப்பகூட இன்னும் அஞ்சு நிமிஷம் மேடம் என்றார்களே ஒழிய யாருக்கும் ஏதும் தரவில்லை…அந்த கொட்டகைக்குள் இருந்தவர்கள் தர்பூசணி எடுப்பது போலவும்…கடிப்பது போலவும் மோரை ஆத்துவது போலவும்.பல வித போட்டோக்கள் எடுத்தார்களே தவிர யாருக்குமே ஏதும் தரவில்லை..இதற்குள் கல்லூரி மாணவர்கள்..மற்றும் பொது மக்களும்.கூடிவிட அவர்களுக்கும் அதே வசனம் தான் ….எல்லோருமே ஒவ்வொருவராகக் கலைந்தோம்….
அப்பகூட நின்னு குடிச்சுட்டுப் போங்கனு சொல்லாம போட்டோ எடுப்பதிலும் செல்பி எடுப்பதிலும்.மட்டுமே கவனம் செலுத்தினர்…
எனக்கும்.என் தோழிக்கும் கோபம வந்து போக போது ஒரு கடையில் 30+30 அறுபது ருபாய்க்கு ஒரு ஜூஸும் வரும் போது 25+25 ஐம்பது ரூபாய்க்கு ஒரு ஜூஸும்…பார்சலுக்கு ஒரு ஜூஸும் எங்க காசுல வாங்கிட்டோம்…
இது நடந்து மூன்று நாள் ஆச்சி…இன்னும்.ஆத்திரம்.தீரலை…..
அதனால் எங்களைப் பொருத்தவரை மய்ய்ய்ய்ய்ய்யம் ஒழிக…