சந்திரன் உன்னிதன் மாரடைப்பில் மரணம் அடைந்தார்… சொல்பவர் பிணராயி விஜயன்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20190103 135111 - 2026

சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கேரள முதல்வர் பிணராயி விஜயன்.

அப்போது அவர், பந்தளம் அருகே சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிணராயி விஜயன், சபரிமலை கர்ம சமிதி அமைப்பைச் சேர்ந்த சந்திரன் உன்னிதன், மாரடைப்பு காரணமாகவே மரணம் அடைந்தார் என்றும் அவருக்கு ஏற்பட்ட காயங்களால் அவர் மரணம் அடையவில்லை என்றும் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கு இடையே பந்தளத்தில் புதன்கிழமை நேற்று நடைபெற்ற கைகலப்பு வன்முறைகளின் போது, மார்க்சிஸ்ட் தொண்டர்கள் எறிந்த கற்கள், சந்திரனின் தலையைப் பதம் பார்த்தன. மண்டை உடைந்த நிலையில், தலையில் அடிபட்டு படுகாயமடைத சந்திரன், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்! அங்கே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர், காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.