தூத்துக்குடி சம்பவம் குறித்து தனக்கு உள்ள சந்தேகங்களை மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஒரு பாமர தமிழனின் மனக்குமுறலும், கேள்விகளும் என்றவாறு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவை…
1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி சூட்டில் பலியான 13 குடும்பத்திற்கு தலா 20 லட்சம் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால் தூண்டப்பட்ட கலவரத்தை ஒடுக்குவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறி உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் என்றால், பயங்கரவாதிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட பேருந்தில் கருகி பலியான கருங்குளத்தை சேர்ந்த வள்ளியம்மாள் குடும்பதிருக்கு ரூ. 20 கோடி இழப்பீடு கொடுக்க தமிழக அரசாங்கம் முன்வருமா? (பயங்கரவாதிகளிடமிருது பொதுமக்களை காக்க தவறிய குற்றத்திற்காக தமிழக அரசு அபராதமாகவும் இதை கருதலாம்).
2. துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நபர்களில் பயங்கரவாதிகளும் உள்ளார