அள்ளி விடுகிறார் #அன்புமணி_ராமதாஸ் ! பாஜக.,வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார மந்திரியாக இருந்த பொழுது தமிழகத்துக்கு ஏன் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர முயற்சிக்க வில்லை என்று கேள்வி
எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அன்புமணி அவர் காலத்தில் மதுரையில் தோப்பூரில் 150 கோடி ரூபாய் ஒதுக்கி எய்ம்ஸ் ஹாஸ்பிட்டல் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது என்றும், பிறகு ஜெயலலிதா ஆட்சியில் அதை கண்டு கொள்ளவில்லை என்றும் இது கூட தெரியாமல் தமிழிசை அவர்கள் தேசியக்கட்சியின் மாநிலத்தலைவராக இருக்கிறார் என்றும் கிண்டல் செய்துள்ளார்.
என்ன இதில் ஆச்சரியம் என்றால் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி அதுவும் தன்னுடைய மாநிலத்தில் செய்யாத ஒரு விஷயத்தை செய்தேன் என்று சொல்வது எவ்வளவு பொய்?!.
அன்புமணி 2008 ல் மதுரையில் எய்ம்ஸ் ஹாஸ்பிட் டலுக்கு அடிக்கல் நாட்டினார் என்றால் அதைப்பற்றிய ஆவணங்கள் எங்கே?
அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த பொழுது மதுரை ராஜாஜி ஹாஸ்பிட்டலின் மேம்பாட்டுக்கு தான் மத்திய அரசின் ‘ஸ்வஸ்த் ஸ்வரஸ் கா யோஜனா’ மூலம் 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதே தவிர மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க அல்ல… என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
அதாவது மதுரை ராஜாஜி மருத்துவமனையை மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவதற்கு தான் 150 கோடி ரூபாயை அன்புமணி ஒதுக்கினாரே தவிர எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அல்ல .
பாவம் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை என்றாலே அது எய்ம்ஸ் மருத்துவமனை என்றே நினைக்கும் அன்புமணி எப்படி மத்திய சுகாதார மந்திரியாக கிழித்து இருப்பார் என்று நீங்களே சொல்லுங்கள்…
அன்புமணி ராமதாஸின் இன்னொரு பொய் என்ன வென்றால் இவர் 2008 ல் மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டியதாக சொல்லப்படும் காலக்கட்டத்தில் தமிழகத்தில் கருணாநிதி தான் ஆட்சியில் இருந்தார். அவரும் அன்புமணியோடு சேர்ந்து மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருந்தார்.
எனவே அன்புமணி அடிக்கல் நாட்டியிருந்தால் அதில் கருணாநிதி நிச்சயம் பங்கடுத்து இருப்பார். அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதாக கருணாநிதியின் குறிப்புகளிலேயே இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கருணாநிதி கூட்டணியில் உள்ளவர்களின் இந்த மாதிரி விசயங்களுக்கு முட்டுக்கட்டை போடமாட்டார்
ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க அதிக பட்சமாக மூன்று ஆண்டுகள் போதும்.அன்புமணி மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டியிருந்தால் 2008-2011 வரை மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி காலத்திலேயே அது நிறைவு பெற்று இருக்க முடியும்.
ஆக செய்யாத ஒரு வேலையை செய்தேன் என்று கூறி அதை ஆட்சியில் இல்லாத ஜெயலலிதா தடுத்தார் என்று சொல்லும் அன்புமணியை என்ன வென்று சொல்வது. இதை விட காமெடி என்னவென்றால் 2014 ல் மத்தியில் பிஜேபி ஆட்சி வந்த பிறகு நாடு முழுவ தும் 12 எய்ம்ஸ் ஹாஸ்பிட்டல்களை உருவாக்க மோடி உத்தரவிடுகிறார்.
தமிழ்நாட்டிலும் ஒரு மருத்துவனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இடம் தேர்வு செய்யுமாறு மத்திய அரசு மாநில அரசை கேட்டுக்கொள்கிறது.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு லெட்டர் எழுதி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட எயம்ஸ் மருத்துவ மனையை தர்மபுரிக்கு அளிக்க வேண்டும் என்று தர்மபுரி எம்பி என்கிற பெயரில் ஜெயலலிதாவுக்கு கடிதம் அனுப்புகிறார்.
மத்திய சுகாதார மந்திரியாக இருக்கும் பொழுதே தங்கள் கட்சி செல்வாக்காக இருக்கும் தர்மபுரி மாவடத்தில் எய்ம்ஸ் ஹாஸ்பிட்டலை கொண்டு வர முயற்சிக்காது மதுரையில் எம்ய்ஸ்க்கு அடிக்கல் நாட்டினேன் என்று அள்ளிவிடுவதை நினைத்தால் சிரிக்கத்தான் தோன்றும்
– சமூக வலைத்தளங்களில்… முன்வைக்கப் படும் கேள்விகள்





நியூஸ௠சேனல௠செரà¯à®ªà¯à®ªà®¾à®² அடிபà¯à®ªà¯‡à®©à¯