இசை ஜாம்பவான்களான மைக்கெல் ஜாக்சன் மற்றும ஜேனட் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 89.
புற்றுநோய் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மைக்கெல் ஜாக்சன் இறந்து 9 ஆண்டுகள் நிறைவு பெற்று இரண்டே நாட்கள் ஆன நிலையில் அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார்.



