இன்றைக்கு இருக்கும் கர்நாடக சங்கீத வித்வான்களிடம் சில கேள்விகள் :-
பதில் திறந்த மனதோடு சொன்னால் நன்றாக இருக்கும் :
(1) பக்தி பாவத்துடன் 24 மணி நேரமும் ராமா கிருஷ்ணா என்ற எண்ணத்துடன் இருந்தது உண்டா.
(2) வாத்தியக்காரர்கள் என்று சொல்லும் மிருதங்கம் வயலின் கஞ்சிரா கடம் கொன்னக்கோல் போன்ற கலைஞர்கள் உங்களது கச்சேரியில் பங்கெடுக்கும் பொழுது உங்களுக்கு என்ன பணம் சம்பாவனை அந்தக் கச்சேரிக்கு வந்ததோ அதே அளவு அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவது இருந்ததுண்டா.
(3) அல்லது நீங்கள் வாங்கும் தொகையில் ஒரு 50 சதவிகிதம் நீங்கள் எடுத்துக் கொண்டு மீதி உள்ள 50 சதவிகிதத்தை ஆவது உங்களுடன் சக கலைஞர்கள் பங்கேற்ற இரண்டு அல்லது நான்கு கலைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்தது உண்டா.
நெஞ்சை தொட்டுச் சொல்லவும்.
(4) திருவையாறில் பல வருஷங்களாக நடந்துகொண்டிருக்கிறது, ஸ்ரீ தியாக பிரம்மம் அவருடைய உற்சவமாக.
ஒவ்வொரு வருடமும் அல்லது ஒரு வருடமாவது, உங்களது சம்பாதிப்பு அல்லது சேமிப்பில் இருந்து 10% ஆவது அங்கு அந்த சபைக்கு கொடுத்தது உண்டா, அல்லது கொடுத்து வருகிறீர்களா.
(5) ஏழை ஹிந்து குழந்தைகளுக்கு ஏராளமான உதவிகளை தொடர்ந்து செய்தது உண்டா.
(6) இந்து சம்பிரதாய நன்நடத்தை, நேர்மை, ஒழுக்கம், விட்டுக்கொடுத்தல், குல ஆசாரம், இவையே எனது வாழ்க்கை என எண்ணி வாழ்ந்தது உண்டா.
(7) உங்களது சொந்த முயற்சியால் எத்தனை கலைஞர்கள் வளர்ந்துள்ளார்கள் அல்லது அவர்களது குடும்பத்துக்கு நீங்கள் தொடர்ந்து உதவிகரமாக இருக்கிறீர்களா.
இதை எல்லாம் நான் ஒரு சாதாரண கர்நாடக ரசிகன் மட்டுமே ஆனால் வாழ்க்கை என்பது எல்லோரிடமிருந்தும் அதிலும் புகழ் பெற்ற மற்றும் பிரபலமாணவர்கள், அதிலும் பிராமணர்கள் தங்களது வாழ்க்கையை நேர்மையாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடுகிறேன்.
நாம் ஒரு சர்ச்சில் மசூதியில் சென்று அவர்களது தெய்வத்தை புகழ் பாட வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாது நமது ராமா கிருஷ்ணா என்ற மந்த்ர சொல், கீர்த்தனைகளாக பக்தியுடன் வெளிப்படுத்தினால் கல்லும் கரையுமே.
அதின் மூலம் மற்ற மதத்தவர்களது மனம் மாறினால் ஹார்மோனி, பீஸ் அமைதி கிடைத்தால் அதுவே நமது திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் அமையக்கூடியது.
இன்றைக்கும் நாம் பார்க்கிறோம் ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே என்றே ISCON இயங்கி வருவது.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்க்கை முறை அல்லவே அல்ல.
குறிப்பாக பிராமண சமூகத்தினருக்கு ஒரு வரைமுறைக்குள் கட்டாயமாக அந்தந்த சம்பிரதாயத்தை அனுஷ்டானத்தை தினமுமே ஒட்டியபடியே வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் வாழ்வதுதான் வாழ்க்கை முறை.
யார் யாரெல்லாம் தலையில் பூ வைத்து, பொட்டு வைத்து, தலை பின்னி தாலியுடன் அந்தந்த சம்பிரதாயத்தை வழக்கப்படி இருக்க வேண்டுமோ அவர்கள் இன்றைய நிலையில் இல்லாதது துரதிர்ஷ்டமே.
அதே சமயத்தில் பொட்டு பூ தலைப்பின்னல் அவசியம் இல்லையோ அவர்கள் அத்துடன் இருப்பதும் கண்ணுக்கு சங்கடமாக இருக்கும்.
நமது அன்றாடசெயலே, நாம் நமது அடுத்த தலைமுறையை, நேர்வழியில் செல்ல வழி செய்ய முடியும். இது நமது கையிலேயே இருக்கிறது வாழ்க்கையில் நேர்மை பேசுவதில் நேர்மை உடையில் நேர்மை செயலில் நேர்மை சம்பாதிப்பதில் நேர்மை தான தர்மத்தில் நேர்மை இப்படி நமது வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல பல தர்ம வழிகள் இருக்கின்றன.
இதை எல்லாம் விட்டுவிட்டு இன்னொரு மதம் சம்பந்தமான, தேவை என்றால் கூட நாம் அங்கு சென்று உதவ வேண்டிய சந்தர்ப்பம் இதுவல்ல.
அவர்கள் நமக்கு வலை விரிக்கிறார்கள், என்பதுகூட தெரியாமல் உள்ளதா ?
அப்படி அங்கு சென்றாலும் நமது கீர்த்தனைகளை அல்லவா பவ்யமாகவும் பாவத்துடனும் பயத்துடனும் சரஸ்வதி எல்லா இடத்திலும் இருக்கிறார் என்ற எண்ணத்துடனும் அல்லவா பாடியிருக்க வேண்டும்.
நாம் எதற்கு இன்னொரு மதத்தினுடைய வழிபாட்டு முறையை அங்கு நமது சம்பிரதாய வழக்கத்தில், சென்று பாட வேண்டும்.
இது புரியாத புதிராக இருக்கிறது. செய்த தவறுக்கு இதுவரை சரியான முறையில் மன்னிப்பு கேட்காதது, அதைவிட விசித்திரமாக உள்ளது. திருந்த வேண்டியது கலைஞர்களே, பிரபலமானவர்களே. அப்பொழுதே சாதாரண ஜனங்கள் நல்ல வழியில், குணத்துடன் இருக்க முடியும்.
கோயில் கொடிமரம், துவஜ்ஸ்தம்பம், நெய் விளக்கு, தேர், கோலம், பூர்ணகும்ப மரியாதை என எல்லா ஹிந்து பழக்கம், தர்மத்தையும் காப்பியடிப்பது, ஹிந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்யவே, என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத பச்சைக் குழந்தைகளா, அருணாசாய்ராம், உன்னிக்ருஷ்ணன், கிருக்குக்ருஷ்ணா, அதிமேதாவி நித்யஸ்ரீ, ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸைந்தவி, இதுமாதிரி பல பெயர்கள் வந்துள்ளது தற்போது. இன்னும் எத்தனை பேரோ ? ஆனால் மற்ற இவர்களது சக கலைஞர்கள் கூட வருத்தம் தெரிவிக்கவேயில்லையே.
ஸ்ரீமும்மூர்த்திகள், ஸ்ரீபுரந்தரதாஸர், ஸ்ரீஅன்னமயா, ஸ்ரீபாபநாசம்சிவன், ஸ்ரீகோபாலக்ருஷ்ணபாரதி ஸ்ரீவெங்கடசுப்பய்யர், போன்ற பலர் இவர்களுக்கு, அவர்களது அனுபவத்தால் எழுந்த கீர்த்தனைகளைக் கொண்டு, சம்பாதித்து கொடுக்கவில்லையா? அத்தனை கலைஞர்களும் மேல் சொன்னவர்களது முதுகில், நன்கு ஆழமாக குத்துகிறார்கள், இவர்களது சுய லாபத்துக்காக, புகழுக்காக என்றே தோன்றுகிறது.
இவர்கள் செய்வது ஹிந்து மதத்துக்கு முழு நம்பிக்கை த்ரோகம் மட்டுமே. தற்போது லட்சக்கனக்கான ஸங்கீதம் பயின்றுவரும் நாளைய வித்வான்களுக்கு, மற்றும் பிரபலமில்லாத, வித்வான்களுக்கு இந்தக் கிறுக்கர்களது பதில்தான் என்ன?
இது ஒரு உண்மையான கர்நாடக சங்கீதத்தின் மீது மிகுந்த பக்தியுள்ள ஒரு ரசிகனது வேதனை இரண்டு மூன்று நாட்களாக இதனால் சரியான உறக்கம் இல்லை.
இவர்கள் தங்கள் தவறை முழுமையாக உணர்ந்து, மன்னிப்பு கேட்பார்களா ? மன்னிப்பு கேட்டபின்னர் நல்ல முறையில் திருந்துவார்களா ?
இனி ஹிந்து மகாஜனங்கள் இவர்களை நம்பலாமா ?
எல்லாமே இனி அவர்களது எண்ணத்தைப் பொறுத்தது
நல்லதே நடக்கும் என நம்புகிறேன்
– டி ராகவன் (D. Raghavan.)





உணà¯à®®à¯ˆ தானà¯.பணதà¯à®¤à®¿à®±à¯à®•௠அடிமை ஆகி வேணà¯à®Ÿà®¾à®®à¯
அரசியலà¯à®µà®¾à®¤à®¿à®•ள௠தான௠விளமà¯à®ªà®°à®¤à¯à®¤à¯à®•à¯à®•௠à®à®¤à®¾à®µà®¤à¯ பணà¯à®£à¯à®µà®¾à®©à¯ ,,,,பாதà¯à®•ாபà¯à®ªà¯à®©à¯à®©à¯ அவன௠தெர௠பகà¯à®•ம௠கூட யாரையà¯à®®à¯ விடமாடà¯à®Ÿà®¾à®©à¯ ,,,இநà¯à®¤ கிரà¯à®·à¯à®£à®¾ à®à®©à¯ கிறà¯à®•à¯à®•à¯à®¤à¯à®¤à®©à®®à®¾à®© நடநà¯à®¤à¯à®•à¯à®•à¯à®¤à¯à®©à¯à®©à¯ தெரியலை …. கரà¯à®¨à®¾à®Ÿà®• சஙà¯à®•ீததà¯à®¤à¯ˆ இவரà¯à®¤à®¾à®©à¯ பரபà¯à®ªà¯à®±à®¾à®°à®¾à®®à¯ …..அதà¯à®•à¯à®•௠இவர௠மறà¯à®±à®µà®°à¯à®•ளை à®à®³à®©à®®à®¾ பேசà¯à®µà®¾à®°à®¾à®®à¯ ….லூசà¯à®¤à¯à®¤à®©à®®à®¾ இரà¯à®•à¯à®•௠…