செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை ஒரே நேரத்தில் திறந்தாலும் அதிகபட்சம் 18,000 கனஅடி தண்ணீரைதான் வெளியேற்ற முடியும். 18,000 கனஅடிதான் செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச நீர் வெளியேற்று திறன்.
ஆனால் அடையாறு ஆற்றில் போன தண்ணீர் 1.5 லட்சம் கனஅடி. அடையாறில் போனதெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர்னு பொய் புளுகிதான் இங்க அரசியல் செய்தானுக கம்யூனிஸ்ட்டுகள் உட்பட.
இப்ப எந்த வித முன்னறிவிப்பும் இல்லாம 38 அணைகளை திறந்துவிட்டு கேரளாவை வெள்ளத்தில் மூழ்கடிச்சாதோட இல்லாம அதுக்கு காரணம் முல்லை பெரியாறு அணைதான்னு பழிபோடுறதுதான் உண்டி குலுக்கிகளோட திறமை.
அதுவும் கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையா நிரம்பட்டும்னு பெருமைக்காக காத்திருந்ததுதான் சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி ஆகிப்போச்சு.
#IdukkiDam 60 டி.எம்.சி தண்ணீரை தொடும்போதே முன்ஜாக்கிரதை கருதி அந்த அணையை திறந்திருந்தா அணையில் 15 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு இடம் இருந்திருக்கும்.
ஆனால் இடுக்கி அணை முழுமையாக நிரம்பி வழியும்போது திறந்துவிட்டா வெள்ளம் வராம பின்ன மோகன்லாலா வருவாரு?
முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிக்குமேல் தண்ணீரை தேக்க முடியாததால் #MullaiPeriyarஅணையிலிருந்து 4 நாட்களாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் வெறும் 3.7 டி.எம்.சிதான்.
இந்த 3.7 டி.எம்.சி தண்ணீர்தான் கேரள வெள்ளத்தை அதிகப்படுத்தியதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் போய் சொல்லியிருக்கு. 75 டி.எம்.சி கொள்ளளவுள்ள இடுக்கி அணையில் முன்னெச்சரிக்கை கருதி 5 டி.எம்.சி தண்ணீரை கொள்ளும் அளவிற்காவது அந்த அணையின் நீர்மட்டத்தை குறைத்து வைக்காமல் இருந்தது யாரின் தவறு?
– நம்பிக்கை ராஜ்




