ஹிந்து அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதற்கு மத சாயம் பூசாதீர்கள்!

Published:

 

hrnce kavitha - 2026
கோப்புப் படம்:

பெயர்- இந்து அறநிலையத்துறை! ஊழியர்கள்- கிறிஸ்துவர்கள்! இதை நீங்கள் எடுத்துச் சொன்னால் மத வாதி! ஊழியர்கள் பெயரில் மத சாயம் பூசக் கூடாது! இந்து அறநிலையத் துறையில் கிறிஸ்துவர்கள் இருப்பது குறித்து கண்டனமோ, இந்து சமய அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்களுக்கு என்ன வேலை? என்ற கேள்வியோ நீங்கள் கேட்டால், அது மதவாதம்!

இப்படி ஒரு விநோதம் எந்த இடத்திலும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் உண்டு. காரணம், ஹிந்து சமய அறநிலையத் துறை!

ஹிந்து மத விழாக்களை கடைப்பிடிப்பதற்கும், கோயில் நடைமுறைகளில் ஹிந்து சமய பண்டிகைகள், உத்ஸவங்களை நடத்துவதற்கும் பல இடங்களில் முட்டுக் கட்டைகளும் அசிரத்தையும் நடப்பது ஏன் என்பதை இப்போது ஹிந்துக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்தவர் பாஜக., பிரமுகர் கே.டி.ராகவன்.

இவர் அண்மையில் ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்து அறநிலைய துறையில் Crypto கிறித்துவர்கள் எவ்வளவு பேர் வேலை செய்கின்றனர் என கணக்கெடுக்கப்பட வேண்டும்….
Crypto கிறித்தவர்கள் பொருள்… : Crypto-Christianity is the secret practice of Christianity, usually while attempting to camouflage it as another faith or observing the rituals of another religion publicly.
கிரிப்டோ கிறிஸ்டின்: ஒரு மதத்திலிருந்து தான் கிறிஸ்துவராக மதம் மாறியதை மறைத்து ரகசியமாக கிறித்துவ நம்பிக்கையை கடைபிடிப்பவர்களை கிரிப்டோ கிரிஸ்துவர் என்று கூறுவர்…

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இந்து அறநிலைய துறையில் ஆவணங்களில் தங்களை இந்துவாக கட்டிக்கொண்டாலும் மதம் மாறி கிருத்துவ நம்பிக்கையை மறைமுகமாக கடைபிடிக்கும் நபர்களை கண்டறிய வேண்டும்.. – என்று குறிப்பிட்டிருந்தார்.

கே.டி.ராகவன் கருத்துக்கு அனைத்து இந்திய கிறிஸ்துவர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் 22ம் தேதியிட்ட அறிக்கையில், இந்து அறநிலையத்துறையில் பணி செய்யும் அலுவலர்கள் மீது மதச் சாயம் பூசும் தமிழக பாசிச பாஜக பிரமுகர் கே.டி.ராகவன் அவர்களை ஆல் இந்தியா கிறிஸ்டியன் பெடரேஷன் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

chrisitan federation - 2026

உண்மையில் அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்களே இல்லை என்றால், இப்படி ஒரு அறிக்கை அந்த அமைப்பிடம் இருந்து வந்திருக்காது என்றே கூறப்படுகிறது. அந்த வகையில், அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள் ஊழியம் செய்கிறார்கள் என்பதை அந்த அமைப்பு ஒப்புக் கொண்டு, மத நடைமுறை அமைப்பான ஹிந்து சமய அறநிலையத்துறையில் ஹிந்துக்களே இருக்கவேண்டும் என்று கூறுவது மதச் சாயம் பூசப்படுவது என்ற அரிய கருத்தை ஒரு கிறிஸ்துவ மதக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கும் விநோதம் தமிழகத்தில்தான் நடக்கும் என்றே கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img