சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டுக்கு ஐயப்ப பக்தர்கள் விடுத்திருக்கும் சவால்கள் இவை…
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
1. தேவஸ்தான போர்டைச் சேர்ந்த எந்த ஒரு கோவில் உண்டியலிலும் உங்கள் காணிக்கையை செலுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பந்தளத்தில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணத்தின் முன்பு போட்டால், அவர்கள் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உபயோகிப்பார்கள்.
2. சபரிமலையில் தயாரிக்கப்படும் அப்பமும், அரவணையும் ஐயப்பன் பிரசாதம் இல்லை. இவை ஐயப்பனுக்கு படைக்கப் படுபவையும் இல்லை. இவை தேவஸ்தானத்தால் தயாரிக்கப் பட்டு வியாபாரம் செய்யப்படுபவை. ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் அவருக்கு நெய் அபிஷேகம் செய்து, அதை மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். அதற்கு மீறிய பிரசாதம் வேறு ஒன்று இல்லை.
3.உங்கள் உடல் நிலை ஒத்துழைக்கும் என்றால் முடிந்த வரை கேரள அரசின் பேருந்துகளை உபயோகிக்காதீர்கள். பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லில் இருந்து பந்தளத்திற்கும் நடந்து செல்வோம்.
அனைத்து ஐயப்ப பக்தர்களும் இதற்கு அதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இவை சபரிமலை கோவிலின் நம்பிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்காக வரிந்து கட்டி ஆதரவு அளித்து செயல்படுத்தத் துடிக்கும், மற்றும் இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக மிகவும் முயன்ற கேரள அரசுக்கும் தேவசம் போர்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாம் காட்டும் ஒற்றுமைப் போராட்டம். சபரிமலை தேவஸ்தானம் நம்மிடம் பணம் சம்பாதித்து நமது கலாசாரத்தையும் நம்பிக்கையும் கெடுப்பதற்காகவே என்பது இப்போது நன்றாக வெளித் தெரிந்திருக்கிறது.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா




