December 5, 2025, 6:39 PM
26.7 C
Chennai

அரசியல் களத்தில்… ஓவரா ஸீன் போட்டீங்க… இப்போ அதற்கான விலையைக் கொடுக்குறீங்க..!

anbumani ramadoss 2 - 2025

அரசியல் களத்தில் ஓவராக சீன் போட்டதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறது பாமக..

எல்லாருமே காலத்திற்கு ஏற்ப கூட்டணி மாறிய படியேதான் இருக்கிறார்கள்.. ஆனால் யாருமே இனி இவர்களோடு கூட்டே கிடையாது என மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்லிவந்ததில்லை..

களத்தின் நிஜம் புரியாமல் காலை தாறுமறாக வைத்து சிக்கிக்கொள்வதில் பாமகவுக்கு ஈடு இணை எந்த கட்சியுமே கிடையாது.. அதுபற்றி விவரித்தால் போய் கொண்டே இருக்கும்..

சத்தியம் வைப்பது, சவுக்கால் அடியுங்கள் என்று சொல்வதல்லாம் அரசியலில் பெருங்காமெடியாகத் தான் போய் முடியும் என்று பாமக என்றைக்குமே புரிந்து கொள்ளப்போவதில்லை..

அரசியலில் கடுமையாக விமர்சித்துவிட்டு அவர்களு டனே கூட்டணி என்பது இங்கு சர்வசாதாரணம். அவ்வளவு ஏன் ரத்தகளம் கணகளமாக சண்டை போட்டவர்களே கூடிக்குலவிய பூமி, தமிழக பூமி..

ஜெயலலிதாவின் முதல் ஆட்சியில் சுப்ரமணியசுவா மிக்கு, உலகப்புகழ் பெற்ற ”சேலை தூக்கல்” தரிசனம் காட்டியது, நாயை துரத்துவதுபோல போலீசார் சு.சாமியை துரத்தியது என நிறைய உண்டு..

ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா முகத்தில் ”வானத்தில் இருந்து” தானாக ஆசிட் ஊற்றியது..அதனால்தான பின்னாளில் சு.சாமி கட்சி சார்பில் சென்னை மேய ருக்கு போட்டியிட்ட அதே சந்திரலேகாவுக்கு ஜெயல லிதா ஆதரவு தெரிவித்தார்

இன்னொரு பக்கம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்க வைத்த சு.சாமிக்கே சில ஆண்டுகளில் கை குலுக்கி மதுரை லோக்சபா சீட்டை தந்து ஜெயிக்கவைத்தார் ஜெயலலிதா.. அவருக்கு மத்திய நிதியமைச்சர் பதவியை தரவேண்டும் என்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய்கே நெருக்கடி கொடுத்தார் ஜெயலலிதா..

ஜெயலலிதாவைவிட, ஆசீட் வீச்சிற்கு ஆளான சந்திரலேகாவுக்கும் வெட்கமில்லை.. சு.சாமிக்கு அதைவிட வெட்கமேயில்லை…

மறுபடியும் பாமகவுக்கு வருவோம். அடக்கி வாசிப்பது ஒன்றுதான் அரசியலில் சாலச்சிறந்தது என்பதை அக்கட்சி இனியாவது புரிந்தால் சரி…

எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலத்தில் கலைஞர் ஒரு நாளைக்கு பத்து பிரச்சினைகளை போட்டு ஓவராய் பேசுவார். எம்ஜிஆரிடம் இதுபற்றி கேட்டால்,

”இந்த எம்ஜி ராமச்சந்திரனைப்பற்றி, எதைச்சொன் னாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியத் தில் கலைஞர் எதையெதையோ பேசிச்கொண்டிருக் கிறார்.. அவற்றை மக்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று சிம்பிளாக முடித்துவிடுவார்..

அரசியலில் தேவையற்ற வகையில் பலரை மிகவும் கடுமையாக விமர்சித்து விட்டு அதன் பிறகு நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டு விமர்சனத்திற்கு ஆளான வர்கள் என, கலைஞரில் தொடங்கி, ஜெயலலிதா, ஸ்டாலின், வைகோ அப்புறம் குட்டீஸ் ஈவிகேஸ் என பெரிய பட்டியலே உண்டு..

பகலில் அக்கம்பக்கம் பார்த்து பேசு. இரவில் அதையும் பேசாதே என்பார்கள்.. ஆனால் பாமக இரவு பகல் பாரா மல் அது மட்டுமே வித்தியாசமான கட்சி, உலகத் துலயே இல்லாத கட்சி,திராவிட கட்சிகளுடனே கூட்டு கிடையாது என நீட்டி முழுங்கி விட்டு அதன்பிறகு கூட்டணி என்று போனதுதான் பிரச்சினைக்கே காரணம்..

பொதுவெளி அணுகுமுறை விவகாரத்தில் சுய பரி சோதனை செய்துகொள்ளாவிட்டால் டாக்டர்கள் கட்சிக்கு நோய் தீரவே தீராது.. இப்போதைக்கு கும்மி எடுப்பார்கள்.. வாங்கித்தான் தீரவேண்டும்..

முட்ட முட்ட துன்னா, கக்க கக்க வாந்தி எடுத்துதானே ஆவணும்…

– ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories