தேவதா மூர்த்திகளை தியான சுலோகங்களில் சொல்லப்படும் வடிவங்களில் அல்லாது, மனம் போன போக்கில் அலங்கரித்தால், தேசத்தில் அனர்த்தம் சம்பவிக்கும்; மழை பொய்க்கும்; மக்களை துயர் சூழும்; ஆட்சிக்கும் ஹானி வரும் என்பது ஆகம வாக்கியம்.

இனியாவது இது போல் அபத்தங்களை செய்யாதீர்கள். தெய்வங்களை அவமரியாதை செய்யாதீர். தியான சுலோகங்களில் சொல்லப் பட்டுள்ள முறைகளில் குறிப்பிடப் பட்டிருக்கும் தேவதைகளை நாம் கண் முன் உருவகிக்க ஏற்ற வகையில்தான் அலங்காரம் செய்யப்பட்டு நம் மனத்தில் இருத்தப் படுகிறது. அது அல்லாமல் தேவையற்ற விதங்களில் உலகியல் வழக்கில் நம் மனம்போன போக்கில் தேவதைகளுக்கான அலங்காரம் செய்தால் பாவம் சம்பவிக்கும்!

புதுவை மாநிலம். பாகூர் கொம்யூன் பிள்ளையார்குப்பம், ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருவிழாவில் ஸ்ரீ முருகப்பெருமான் புல்லட் வாகனத்தில் தலைக் கவசத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது…. எடுத்த படம்!

– அரவிந்த் சுப்ரமணியன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...