இதயங்களை வென்ற ஆய்வாளர் ராமையாவுக்கு நெல்லை முழுதும் இரங்கல் போஸ்டர்!

Reporters Diary உள்ளூர் செய்திகள் நெல்லை லைஃப் ஸ்டைல்

nellai singampatti si - 2026நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளர் ராமையா.

இவர் நெல்லை பாளையங்கோட்டையில் பணியாற்றி வந்தார். பின்னர் தற்போதுதான் சென்னைக்கு மாற்றலாகி அங்கே பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காவல் ஆய்வாளர் ராமையா கடந்த 18ஆம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய நல்லடக்கம் 19 ஆம் தேதி சிங்கம்பட்டியில் நடைபெற்றது.

இதனிடையே, காவல் ஆய்வாளர் ராமையாவின் மறைவுக்கு நெல்லை நகரில் பலரும் வருத்தம் தெரிவித்து, அஞ்சலி போஸ்டர்களை போட்டி போட்டு ஒட்டினர். பாளையங் கோட்டையில் பணியாற்றிய போது, ஆய்வாளர் ராமையாவின் மனிதாபிமான செயல் பாடுகளும், பொதுமக்களுக்கு ஒத்துழைத்து பணியாற்றிய விதமும் பலரை ஈர்த்திருந்தது.

police anjali - 2026

குறிப்பாக, கடந்த வருடம் நடைபெற்ற தாமிரபரணி மகா புஷ்கர நேரத்தில், ஆய்வாளர் ராமையா பக்தர்களுக்கு ஒத்துழைத்து, வசதிகள் செய்து தருவதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதிலும் அக்கறையும் ஈடுபட்ட விதத்தை நினைவு கூர்ந்து, நெல்லை நகரில் அஞ்சலி போஸ்டர்களை பலர் ஒட்டியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.