ரயில்வே துறையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதா?

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

chennai central railway station - 2026

ரயில்வே துறையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. தென் இந்தியா அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் புறக்கணிக்க படுகிறார்கள் என்கிற புளுகை சென்னை உயர் நிதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

மனுதாரர் ரயில்வே பரிட்சையில் வாங்கிய மார்க் 4.33/100… அந்த கடுப்பில் தான் இது போல் வட மாநிலம் சார்ந்தவர்களுக்கு ரயில்வேயில் வேலையில் முன்னுரிமை என்று கிளப்பி விட்டு கேஸ் போட்டு தோல்வியும் கண்டு இருக்கிறார்.

எது உண்மை? கிட்டதட்ட 16 இலட்சம் பேர் ரயில்வேயில் பரீட்சை எழுத விண்ணப்பித்து இருக்கின்றனர். அதில் 11 இலட்சம் பேர் மட்டுமே எழுத தகுதி உடையவர்கள் ஆகின்றனர். அதிலும் 12,000 பேர் மட்டுமே நேர்காணலுக்கு தகுதி உடையவர்கள் ஆகின்றனர். இதில் சுமார் 7800 பேர் தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள். 3000 பேர் கிழக்கு இந்தியா, 1000 பேர் மேற்கு, வெறும் 400 பேர் மட்டுமே வட இந்தியாவை சேர்ந்தவர்கள்!

சிபிஐ விசாரணை மேற்கொள்ள சொல்லி மனுதாரர் சார்பில் கொடுத்த வழக்கில் CBI தாக்கல் செய்த அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. நீதி மன்றம் இதை கருத்தில் கொண்டு வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

  • Shriram Tkl

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.