கண்ணகி பிறந்தது எங்கே? ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை! சிலப்பதிகாரம்கூட தெரியாமல் தமிழன் என்று சொல்ல வெட்கமாக இல்லை..?!

Published:

stalin stage - 2026

மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் குறித்துக் கூறியதாக ஒரு வீடியோ வாட்ஸப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

அதில், நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்றும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் கூறுவதாகவும் அந்த வீடியோவில் உள்ளது.

அதில் சான்றோரும் ஒன்றுகொல்.. சான்றோரும் உண்டு கொல் என்று காற் சிலம்போடு நீதி கேட்டு கண்ணகி பிறந்த இந்த மதுரை மண்ணில் நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடியின் உடைய ஆட்சியில் அப்புறப்படுத்த வேண்டும்… – என்று பேசுகிறார் ஸ்டாலின்.

இருப்பினும், சான்றோரும் ஒன்றுகொல் சான்றோரும் உண்டுகொல் என்று மாற்றி மாற்றிப் பேசும் மு க ஸ்டாலினுடைய இந்த வீடியோ ஏதோ ஒரு குழுவினரால் எடிட் செய்யப்பட்டது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது! காரணம், இதில் ஸ்டாலின் பேசும்போது நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்று வரும் இடத்தில் மட்டும் அவருடைய உதட்டு அசைவுக்கும் சொல்லும் வார்த்தைக்கும் ஒத்திசைவு இல்லாமல் இருக்கிறது! ஆகவே இது எடிட் செய்யப்பட்டு பரப்பப் படுகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது!

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

ஆனால் இதில் ஒரு விஷயம் கண்ணகி பிறந்த இடம் மதுரை என்று அவர் கூறுவது மட்டும் தெளிவாக இருக்கிறது. அவருடைய உதட்டசைவில்!

ஆனால் கண்ணகி பிறந்தது பூம்புகார் நகரத்தில். பூம்புகார் நகரின் மிகச்சிறந்த வணிகராகத் திகழ்ந்த மாசாத்துவான் என்பவரின் மகளாக கண்ணகி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறார்

இப்படி சிலப்பதிகாரத்தை படித்த மு க ஸ்டாலின் மதுரையிலிருந்து கொண்டு மதுரையில் பிறந்த கண்ணகி என்று தப்பும் தவறுமாக உளறிக்கொட்டிச் சென்றது, கேட்பவர்கள் எவருக்கும் தெரியவில்லை! புரியவில்லை!

ஏன் என்றால் அவர்களுக்கும் சிலப்பதிகாரம் தெரிய வாய்ப்பில்லை! அந்த அளவுக்கு திமுக தமிழகத்தின் இந்தத் தலைமுறை தமிழர்களை வளர்த்திருக்கிறது!  களை வளர்த்திருக்கிறது. பயிர்கள் வாடிப் போய் கவனிப்பாரின்றி!

திமுக., தமிழர் இலக்கியம் என்று சிலம்பைச் சொல்கிறது. ஆனால், சிலம்பின் பல பகுதிகளை கிண்டலும் கேலியும் செய்து அசிங்கப்படுத்தியவர் திக., தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

தமிழ் இலக்கியங்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க விடாமல் செய்தது இந்த திமுக தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டுள்ளது!

Related articles

Recent articles

spot_img