“பெரியவாளின் அதிசய அருள் வைத்தியம்”

(இரண்டு சம்பவங்கள்)
(ரத்த அழுத்தம்,சர்க்கரைக்காரருக்கும் பைத்தியக்காரப் பையனுக்கும்-அருள் செய்தது)
சொன்னவர்-.மடம் பாலு
தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
.
சம்பவம்-1
மிகவும் பருமனான சரீரமுடைய ஒரு பக்தர்
பெரியவாளிடம் வந்து முறையிட்டார்.
ரத்த அழுத்தம்,சர்க்கரை,கொலஸ்ட்ரால் போன்ற
பல தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறினார்.
எவ்வளவோ மருந்து சாப்பிட்டும் உணவு அளவைக்
குறைத்தும் கூட கனம் குறையவில்லை என்றார்.
(இவர் நாட்டுக்கோட்டை செட்டியார்)
” நீ திருவண்ணாமலைக்குப் போய் ஒரு மண்டலம்
தங்கு. முடிந்த வரை கிரிபிரதட்சிணம் செய். நடக்க
முடியாத இடத்திலிருந்து கார்,ஆட்டோ எதிலாவது
போய் பிரதட்சிணத்தை முடிச்சுடு. என்ன?….
ஒரு கிலோ மீட்டர் நடந்து போ…அப்புறம் ஆட்டோ!…”
செட்டியார் அப்படியே செய்தார்.ஒரு வாரத்துக்குப் பின் உடல் எடை குறைய ஆரம்பித்தது. ஒரு மண்டலம் ஆனவுடன்,அநேகமாக ஓர் ஆண் உடல் அளவுக்கு வந்து விட்டார்.
மண்டலம் பூர்த்தியானதும் பெரியவாள்
தரிசனத்துக்கு வந்து, நமஸ்காரம் செய்தார்.
“சிரமமில்லாமல் நமஸ்காரம் செய்ய முடியறது
போலிருக்கே!” என்றார்கள் பெரியவாள்.
செட்டியார் புல்லரிக்க நின்றார்.
…………………………………………………………………………………………………
சம்பவம்-2
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி
தரிசனத்துக்குப் போனார்கள் பெரியவாள்.
புத்தி சரியில்லாத ஒரு பையனை சங்கிலியால்
கட்டிப் போட்டு, ஓர் ஆளுடன் சேர்த்து வெளிப் பிரகாரப் பிரதட்சிணம் செய்ய அனுப்பி வைத்தார்கள்.
பையன் முரண்டு பண்ணியதால், துணைக்கு வந்த ஆள் கழியால் அடித்து இம்சித்தான்.
பைத்தியக்காரப் பையன் படும் கஷ்டத்தைப்
பார்த்துப் பெரியவாளுக்கு இரக்கம் உண்டாயிற்று.
“கட்டுகளை அவிழ்த்து விடு. பையன் ஒண்ணும்
செய்யமாட்டான்…..” என்றார்கள்.
கட்டை அவிழ்த்து விட்டதும் பையன் நேரே
பெரியவாளிடம் வந்து நமஸ்காரம் செய்தான்.
“அவன் என்னுடன் வரட்டும்” என்றார்கள்,பெரியவாள்.
பையன் ஸ்ரீ மடத்திலேயே இருந்து வந்தான்.
சேஷ்டைகள்,தொல்லைகள் செய்வதில்லை.
சில நாட்களில் அவனுடைய பைத்தியம் தெளிந்தது.
ஸ்ரீமடத்தில் சின்னச்சின்ன வேலைகளை செய்து வந்தான்
பிறகு,அவன் பெற்றோரைக் கூப்பிட்டு அனுப்பி,
“இவனைப் பள்ளிக்கூடத்திலே சேர்த்து,படிக்க வை”
என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்கள்,பெரியவாள்



