இதுதான் தமிழ் ஊடக ‘அறம்’!

Published:

breaking news tv screen saver background vector 18533369 - 2026

எதிக்ஸ்.. எதிக்ஸ்.. என்று ஒரு பாடத்தை ஜர்னலிஸம் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் மட்டும் ஜர்னலிஸம் படிப்பு என்பது கிறிஸ்துவ கல்லூரிகளிலும், இடதுசாரிகளின் கைகளிலும் இருப்பதால், இங்கே ஊடக அறம் என்பது அரசியல் ஊடக அறமாகவே சொல்லித் தரப் படுகிறது.

போதாக் குறைக்கு, ஊடகங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பதால், அரசியல் இல்லாமல் எந்த ஒரு செய்தியும் இல்லை என்று ஆகிவிட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக ஊடக அறம் குறித்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறு கருத்து இட்டு வரூகிறார்கள் பலர்…

பக்கத்து எதிரி நாட்டின் உள்ளே புகுந்து அடித்து அடக்கி வச்சா, ஐயோ வன்முறை.

உலக நாடுகளுடன் வர்த்தக உறவு மேம்படுத்தினால், ஐயோ ஊர் சுத்துறார்.

பயங்கரவாதம் நடக்காமல் கடுமையாகப் பாதுகாப்பு கொடுத்தால், ஐயோ அடக்குமுறை.

புதிய தொழிற்சாலைகள் தொடங்கினால், ஐயோ கார்பொரேட்டுக்கு ஆதரவு…

ஒரு பெண் ஆசிய விளையாட்டி தங்கம் வென்றால், ஐயோ ஏழ்மைப் பெண்ணுக்கு அரசாங்கம் ஏதும் செய்யல….

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

இந்த தேசத்தை நினைத்து பெருமைப் பட எந்த இடத்திலும் இடம் கொடுத்திடக் கூடாது என்பதில் இந்த ஊடகத்தினர் எவ்வளவு கவனமா வேலை செய்றானுக

பாருங்க! ரொம்ப சீக்கிரம் அழியப் போறீங்கடா!

Related articles

Recent articles

spot_img