Burmese Coconut Rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பர்மிஸ் கோகெனெட் ரைஸ்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Burmese Coconut Rice - 2026

பர்மிஸ் கோகனெட் ரைஸ்
தேவையான பொருட்கள்
அரிசி – 2 கப்
தேங்காய் – ஒன்றில் துருவி எடுத்த பால் 4 கப்
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 3
கிராம்பு – 3
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – ஒன்று
பட்டை – ஒன்று
பூண்டு – 3
புதினா – கொஞ்சம்
சோம்பு – ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது – ஒரு தேக்கரண்டி
நெய் – 5 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
முந்திரி – 5

செய்முறை
குக்கரில் எண்ணெய், நெய்யும் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கிராம்பு, இலை, பட்டை, சோம்பு, இஞ்சி விழுது, பூண்டையும் போட்டு வதக்கவும்.
புதினாவும், களைந்த அரிசியும் போட்டு கொஞ்சம் வதக்க வேண்டும்.
2 கப் அரிசிக்கு 4 கப் தேங்காய் பால், உப்பும் போட்டு ஒரு விசில் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்ய வேண்டும்.
ஆறின பிறகு நெய்யில் முந்திரி வறுத்து போடவும், மேலே கொத்தமல்லி இலை போட்டு அலங்கரிக்கவும்.
ரொம்ப டேஸ்டியாக இருக்கும்.

இது தேங்காய் பாலில் செய்வதால் ரிச்சாக இருக்கும் பர்மிஸ் விரும்பி சாப்பிடக்கூடியது.
பாஸ்மதி அரிசியிலும், சாதா அரிசியிலும் செய்யலாம். பாஸ்மதி அரிசி ஒரு விசில், சாதா அரிசி 3 விசில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.