பொங்கல் ஸ்பெஷல்: கரும்புச்சாறு பொங்கல்!

Sugarcane juice Pongal - 2026

கரும்பு சாறு பொங்கல்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1/4 கப்
பாசிப்பருப்பு – 1/8 கப்
கரும்புச்சாறு – 1 1/2 கப்
வெல்லம் – 1/8 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சிறிது
உலர் திராட்சை – சிறிது
ஏலக்காய் பொடி – சிறிது

செய்முறை:

முதலில் கரும்பின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பின் அதை மிக்சரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதுப்போன்று 1 1/2 கப் அளவு கரும்பு சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பிறகு குக்கரில் கழுவிய அரிசி மற்றும் கரும்பு சாற்றினை எடுத்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி குறைவான தீயில் 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கரண்டியால் கிளறிவிட்டு வெல்லத்தை நன்கு கரைய வைக்க வேண்டும். அதன் பின் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சையைப் போட்டு வறுத்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.

குறிப்பு:

வேண்டுமானால் ப்ளேவருக்கு இதில் பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தும் பச்சரிக்கு ஏற்றவாறு விசில் விட்டுக் கொள்ளுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories