thinai payasam - 2026

ஆரோக்கிய சமையல்: தினை பாயாசம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
thinai payasam - 2026

தினை பாயாசம்

தேவையானவை:

தினை மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
பாசிப்பருப்பு – கால் கப்
ஏலத்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – தலா 1 டீஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து அடுப்பில் வைக்கவும். முழுவதும் கரைந்தவுடன் வடிகட்டிக்கொள்ளவும். பாசிப்பருப்பை வேகவிடவும். பருப்பு பாதி வெந்ததும் தினை மாவை வெல்லத்துடன் கலந்து அதில் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்து வரும்போது, ஏலத்தூள் தூவி, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.