thanni kuzhumbu - 2026

இந்த குழம்பு ட்ரை பண்ணுங்க.. தண்ணிக்குழம்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
thanni kuzhumbu - 2026

தண்ணிக்குழம்பு

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் புளி – பெரிய நெல்லிக்காய் அளவு வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் துவரம்பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கலவை, தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (ரசம் போல தண்ணீர் அதிகமாகச் சேர்த்து இளங்குழம்பாகத் தயாரிக்கவும்).

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.