வரகரிசி பாயாசம்
தேவையான பொருட்கள்:
வரகரிசி – 100 கிராம்,
தேங்காய் பால் அல்லது
கொழுப்பு நீக்கப்பட்ட பால் -1 கப்,
துருவிய வெல்லம் & அரை கப்,
பாசிப்பருப்பு -1 மேசைக்கரண்டி,
முந்திரி, திராட்சை -தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் -கால்தேக்கண்டி,
நெய் அல்லதுசூரியகாந்தி எண்ணெய் – அரை தேக்கரண்டி.
செய்முறை:
- அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு, சமைக்கவும்.
- வெந்ததும், அதை
நன்கு மசித்து, வெல்லப்
பாகு சேர்த்து ஒரு
கொதிக்க விடவும். - பிறகு தேங்காய் பால் அல்லது சாதாரண பால் விட்டு, இறக்வும்.
- பின்னர், ஏலக்காய் சேர்த்து, நெய்
அல்லது எண்ணெயில் வறுத்த முந்திரி,
திராட்சை தூவிப்
பரிமாறவும்.