202204210804149411 1 KG Gold Sized at Chennai Airport From 2 Passengers Who SECVPF - 2026

துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் கைது..

கிரைம் நியூஸ்

சென்னை விமான நிலையத்தில
துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவ

சென்னை விமான நிலையத்தில
துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து 1 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டாலும் விதவிதமாக தங்கம் கடத்தி வருவது நீடிக்கிறது.நாட்டில் தங்கம் கடத்தும் மிகப்பெரிய மையமாக சென்னை விமானநிலையம் உருவாகி வருகிறது. இதையடுத்து, தங்க கடத்தல் சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாக்கா அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த அபுபக்கர், சிவகங்கையை சேர்ந்த முகமது மில்கான் ஆகிய இருவரும் உள்ளாடைக்குள் மறைத்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இருவரையும் கைது செய்த நிலையில் அவர்களிடமிருந்த 57.07 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 180 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

202204210804149411 1 KG Gold Sized at Chennai Airport From 2 Passengers Who SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.