
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அன்வர்ராஜா எம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பொறுப்பாளர் அதிமுக எம்பி. அன்வர்ராஜா நேற்று கரூரிலிருந்து பள்ளபட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
கார் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மண்மாரி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது அங்கு அமமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிலர் திடீரன அன்வர்ராஜா வந்த வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காரிலிருந்து இறங்கி வந்த அன்வர்ராஜா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அவரது காரையும் சேதப்படுத்தினர்.
இதையடுத்து அங்கிருந்து தப்பிய அன்வர்ராஜா பள்ளப்பட்டி சென்று முன்னாள் நகரச் செயலாளா் டிஎம்.அபுதாகீரிடம் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்த அன்வர்ராஜா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அபுதாகீர் புகார் கொடுத்துள்ளார்
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



