images 10 1 - 2026

பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.3.50 லட்சமாக பெற்ற பணத்தை பறிமுதல்..

கிரைம் நியூஸ்

ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று சோதனை செய்ததில் ரூ.3.50 லட்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ண ராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜ் என்பவரிடம், ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் 3.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். இதனையடுத்து உதவி கோட்ட பொறியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரிடம் இருந்து ரூ.3.50 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 10 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.