Tamil News large 3037189 - 2026

காட்பாடி அருகே நகை கடையில் கொள்ளை..

கிரைம் நியூஸ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அருகே சேர்காடு அண்ணாநகரிலகுறுக்கு சாலையில் தனியாருக்கு சொந்தமான நகை மற்றும் அடகு கடை உள்ளது. இதற்கு, பக்கத்தில் ஜூஸ் கடையும் உள்ளது. மர்ம நபர்கள் இன்று  அதிகாலை 2 மணிக்கு ஜூஸ் கடை சுவற்றில் துளையிட்டு அதன் வழியாக நகை கடையில் ரூ 75 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நகைகள் கொள்ளையடித்துள்ளனர். அடகுக் கடையிலிருந்து 30 கிலோ தங்க, வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதன் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tamil News large 3037189 - 2026

கடை உரிமையாளர் அனில் குமார் கொடுத்த புகார்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என போலீசார் பல முறை அறிவுறுத்தியும், அதனை கடை உரிமையாளர்கள் இது வரை பொருத்தாமல்  அலட்சியப்படுத்தினர். போலீசாரும் அலட்சியமாக இருந்தாலும், பாதுகாப்பு கொடுக்காமல் இருந்ததும் கொள்ளைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.