கணவன் கருப்பு குழந்தை சிவப்பு மனைவி மீது சந்தேகம் 6 மாத குழந்தை அடித்து கொலை..

Published:

குழந்தை சிவப்பாக பிறந்ததால் மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவர் 6 மாத குழந்தையை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் திருப்பதி அருகே நடந்து பலரையும் அதிர்சியடைச்செய்துள்ளது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியை சேர்ந்தவர் ரங்கா முரளி .ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வீணா. இவர்களுக்கு முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது.தற்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியில் உள்ள பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ரங்கா முரளி மனைவி வீணாவிடம் நான் கருப்பாக இருக்கிறேன் ஆனால் பிறந்த குழந்தை சிவப்பாக உள்ளதால் அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த ரங்கா முரளி மனைவியிடம் எனக்கு பிறக்காத குழந்தை உயிருடன் இருக்கக்கூடாது என கூறி பூட்டால் குழந்தையில் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.இதில் குழந்தை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மேலும் முரளி வீணாவையும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. வீணாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது குழந்தை இறத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இது தொடர்பாக கர்னூல் 4-வது டவுன் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றினர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தந்தையே தனது குழந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

images 52 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img