

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் செல்போனை திருடியதாக சந்தேகப்பட்டு சாமியாரை அடித்துக் கொன்ற திருநங்கை 3 பேர் மேலும் ஒருவர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மாவட்டம் கிடாரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற கன்னையா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறி சாமியாராக யாசகம் எடுத்து வருகிறார் இவர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த பொழுது திருநங்கையின் செல் காணாமல் போய் உள்ளது கண்ணையா தான் எடுத்தார் என்று சந்தேகத்தின் அடிப்படையில் இவரை திருநங்கைகளான ஜெனிதா வயது 21 தகப்பனார் பெயர்
மருதபொண்ணயா கணபதி சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் .இவருடைய தோழிகளான இராஜபாளையம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரது மகன் (திருநங்கை) மாளவிகா வயது 32 அதேபோல் சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் (திருநங்கை) பாரதி வயது 19 ஆகிய மூன்று பேரும் இவர்களது நண்பர் இராஜபாளையம் குமரன் திருவைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மகன் ஜெயபிரகாஷ் என்ற கங்குலி வயது 17 ஆகிய நான்கு பேரும் கண்ணையாவை அடித்ததில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் .


இது குறித்து துராஜபாளையம் தெற்கு கால்நடை போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செல்போனை மற்றொரு நபர் எடுத்துச் சென்றதற்கு தவறாக புரிந்து கொண்டதன் காரணமாக இவரை அடித்துக் கொண்டுள்ளனர்.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதற்கு உதாரணமாக ஒரு உயிர் பலியாகி உள்ளது