
திருமண ஆசை கூறி சிறுமியை ஏமாற்றி
பாலியல் தொல்லை அளித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லூர்பாண்டியன்(27). கூலி தொழிலாளி இவர் கடந்த 1.08.2017 அன்று 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்தார்.
இதுகுறித்த புகாரில் நல்லூர்பாண்டியனை போக்சோவில் ராஜபாளையம் வடக்கு போலீஸார் கைது செய்தனர். வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மாவட்ட போக்சோ நீதிபதி பூர்ணஜெய ஆனந்த், சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக நல்லூர்பாண்டியனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.





