ராஜபாளையம் அருகே
வாங்கிய கடனை திருப்பி தராத வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசாணம் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (30) இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவதானம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மருதுபாண்டி என்பவரிடம் ரூ.15, ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் மருதுபாண்டி மற்றும் நான்கு பேர் ஆனந்த குமாருக்கு போன் செய்து சுந்தரராஜபுரம் பகுதியில் உள்ள இசக்கியம்மன் கோவிலுக்கு வரவழைத்து உள்ளனர்.
இசக்கியம்மன் கோவிலில் இருந்து அவரை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று சேத்தூர் மேற்கு பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே கடத்திச் சென்று இடது பக்கம் மற்றும் வலது பக்க விலா, வயிறு, தலை போன்ற பகுதிகளில் பயங்கரமாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு உடலை அங்கேயே விட்டு சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சேத்தூர் போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து ரவுடி மருதுபாண்டி உள்பட 5 பேரை சேத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். இறந்த ஆனந்தராஜுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.