
தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
அவர்களின் கொடூரங்களுக்கு அவர்களின் மத நாடுகள் துணை நிற்கின்றன. ஹிந்துக்களின் வேதனைக்கும் கோபத்திற்கும் துணை நிற்பதற்கும் ஆதரவு அளிப்பதற்கும் ஹிந்து நாடுகள் உள்ளனவா?
ஹிந்து தர்மத்திற்குத் தாய்நாடான பாரத தேசத்தில் ஹிந்துக்களே தவறான கருத்துக்கள் கூறி தவறான பிரசாரத்தில் ஈடுபடுகிறாகளே… இனி ஆதரவோ பாதுகாப்போ எங்குள்ளது?
பதவிக்காக தேச முன்னேற்றத்தையும் ஹிந்து தர்மத்தையும் கூட அழிப்பதற்கு பின்வாங்காத தீய அரசியல்வாதிகளின் கும்பல் வெளிநாட்டு சக்திகளோடு கூட்டு சேர்ந்து சதித்திட்டங்கள் தீட்டி பாரத தேசத்தில் கொடூரங்களைத் தூண்டி விடுவதை சில நாட்களாக பார்த்து வருகிறோம். அவர்களுக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்து மாற்றி சில ஊடகங்கள் செய்யும் அட்டூழியங்களையும் பார்த்து வருகிறோம்.
நாட்டுப் பற்று, நீதி, நேர்மை, நாட்டு முன்னேற்றமே இலக்காகக் கொண்டுள்ள உயர்ந்த மனிதர்களின் ஆட்சியில் சர்வ தேச அளவில் பாரத தேசத்தின் புகழ் நிலைபெற்று, பொறியியல், விஞ்ஞானம், கலாசாரம் அனைத்திலும் வலிமையோடு சிறந்த நிலையில் உள்ள தேசமாக வளர்ந்து வரும் விஷயம் நம் தேச மக்களை விட வெளிநாட்டு அரசுகளுக்கு அதிகம் தெரிகிறது. தீய கர்வத்தாலும் ஊழலோடு கூடிய தீர்மானங்களாலும் துயரத்தில் விழுந்து வரும் உயர் நாடுகளுக்கு நம் வளர்ச்சி கண்ணை உறுத்துகிறது. பாரதத்தின் உதவியோடு மேலும் சில நாட்டு அரசுகள் நன்மை பெற்று வருவதோடு நல்ல உறவுக்கும் அடித்தளம் அமைத்து வருகின்றன.
விரலை நீட்டி சுட்டி காட்ட முடியாத முறையில் சிறந்த தலைமையாக வளர்ந்து வரும் பாரத தேசத் தலைமையை அசைத்து விட வேண்டுமென்றும், துயரில் ஆழ்த்த வேண்டும் என்றும் தேசத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்றும் திட்டம் தீட்டி மத துவேஷங்களை கிளப்பி விடும் ஒரு தீய வியூஹம் தேசமெங்கும் பரவி வருகிறது. நாட்டு சொத்துக்களை நாசம் செய்வது, தனிமனித இகழ்ச்சி, அமைதியின்மை போன்றவை பரவி வந்தாலும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் சில மாநில அரசுகள் மத வெறுப்பை தூண்டிவிட்டு வருகின்றன.
பேச்சு சுதந்திரம், மதசார்பின்மை என்று கதை பேசும் கும்பல்கள் அனைத்தும் இந்த நேரத்தில் ஊமையாகி விடுகின்றன. பெண்ணீய வாதிகள் மௌன விரதம் எடுத்துவிடுகிறார்ர்கள். தம் மதத்தை கைநீட்டி சுட்டிக் காட்டினால் கொன்று விடுவோம், மான பங்கம் செய்வோம் என்று சட்டத்திற்கு விரோதமாக கூச்சல் போட்டு அச்சுறுத்தல் செய்தாலும் கண்டுகொள்ளத இந்த கும்பல் ஹிந்து மதத்தின் மீது மட்டும் எரிந்து விழுந்து ஆத்திரப் படுகிறது. இவர்களின் பகுத்தறிவு வாதம், நேர்மை, மனிதாபிமானம் என்ற பேச்செல்லாம் ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கே தவிர ஹிந்து மதத்தின் மீது காட்டும் கொடூரங்களை கேள்வி கேட்பதற்கோ தட்டிக் கேட்பதற்கோ முன் வருவதில்லை. மேலும் பரிதாபமாக பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் மீது தீவிரவாதிகள் என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு கூட சுமத்தப்படுகிறது.
தாக்கப்பட்ட தம் வரலாற்றுப் புகழ்பெற்ற கோவில்களை புனரமைக்க வேண்டுமென்று ஹிந்துக்கள் முயற்சித்தால் சகிக்க முடியாத மத மூடர்கள் ஹிந்து மதத்தை தீய சொற்களால் நிந்தித்து ஹிந்து கடவுளர்களை அவமரியாதை செய்கையில் மன்னித்து விட வேண்டும் சகித்துக் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு சொல்லை சொற்பொழிவில் கூறிவிட்டால் அதனை மலை போல் பெரிதாக்கி அழிவுகளைச் செய்கையில் யாரும் தடுக்க முன்வருவதில்லை. அவர்களின் கொடூரங்களுக்கு அவர்களின் மத நாடுகள் துணை நிற்கின்றன. ஹிந்துக்களின் வேதனைக்கும் கோபத்திற்கும் துணை நிற்பதற்கும் ஆதரவு அளிப்பதற்கும் ஹிந்து நாடுகள் உள்ளனவா? ஹிந்து தர்மத்திற்குத் தாய்நாடான பாரத தேசத்தில் ஹிந்துக்களே தவறான கருத்துக்கள் கூறி தவறான பிரசாரத்தில் ஈடுபடுகிறாகளே… இனி ஆதரவோ பாதுகாப்போ எங்குள்ளது?

‘அரை மணி நேரம் கொடுத்தால் ஹிந்துக்கள் அனைவரையும் சர்வ நாசம் செய்வேன். எங்கள் இளைஞர்களுக்குக் கோபம் வந்தால் ஹிந்துக்களுக்கு தலை சாய்த்துக் கொள்ளக் கூட இடமிருக்காது’ என்று பாரத தேசத்திலேயே பிற மதத் தலைவர்கள் பயமுறுத்தினாலும் கேட்கும் ஊடகமோ மேதாவிகளோ தலைவர்களோ அற்ற தீய கீழான நிலையை ஹிந்துக்கள் கவனிக்க வில்லையா?
மதக் கொடூரத்தாலேயே வரிசையாக மூன்று துண்டுகளான அகண்ட பாரத தேசத்தில் மீதி இருக்கும் பகுதியையும் துண்டாடுவதற்கு சதித் திட்டம் தீட்டி தம் அசுரப் படைகளை ‘பாயின் கீழிருக்கும் நீரைப் போல்’ பரப்பி வருகிறார்கள். ஹிந்துக்கள் பலரை இருக்க இடமின்றி செய்து துவம்சங்களை செய்தாலும் அதனை மூடி மறைக்கும் சில மாநில அரசுகள் நாட்டுப் பாதுக்கப்புக்கு தீமை விளைவிப்பதற்கும் பின்வாங்கவில்லை. தத்துவமும் சாத்வீகமும் கொண்ட மதமான ஹிந்து மதத்தின் மீது தீவிர வாதம் என்ற அபவாதம் சுமத்துவதற்கு கூட இவர்கள் தயங்கவில்லை.
பிற மதத்தவர்களின் தீவிர வாதத்தை அந்த மதத்தவர் விரல் நீட்டி கண்டிக்க மாட்டார்கள். வாய் திறந்து விமர்சிக்க மாட்டார்கள். ஆனால் ஓட்டுக்காக ஹிந்துக்களான அரசியல் தலைவர்கள், ‘இல்லாத’ தீவிர வாதத்தை ஹிந்துக்களின் மேல் சுமத்துகிறார்கள்.
இத்தனை தீய சதிகளையும் எதிர்கொண்டு பாரத மாதாவை காப்பதற்கு ஒரு தவ முனிவர் போல் யோகியாக சுயநலமின்றி உழைத்து வரும் தலைவருக்கு ஆதரவாக நிற்பது ஒவ்வொரு ஹிந்துவின் கடமை மட்டுமல்ல. உண்மையான நாட்டு முன்னேற்றத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் நேர்மையான பொறுப்பும் கூட.
வளர்ச்சியின் பலன்கள் ஒரு மதத்திற்கு மட்டுமல்ல… அனைத்து மதங்களுக்கும் சமமாகவே கிடைக்கும். பொறுமை, ஒற்றுமை, சமரசம் போன்றவை இயல்பாகவே பெற்ற ஹிந்து மதத்தின் நலன் சர்வ தேச மானுடனுக்கும் நலனே விளைவிக்கும். மத மாற்றங்கள், படுகொலைகள் இல்லாமல் வாழு, வாழவிடு என்ற உயர்ந்த சிறந்த கொள்கையே ஹிந்துத்துவம். இந்த ஆட்சி நலமாக அதிக வலிமையோடு விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்!
- தலையங்கம் ஜூலை 2022 ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ்