இணையத்தில் வினாத்தாள் வெளியானது! 10,11,12 காலாண்டுத் தேர்வு!

கல்வி தமிழகம்
- 2026

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் இணையத்தில் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வின் வினாத்தாள் ஷேர் சாட் எனும் செல்போன் செயலி மூலம் இணையத்தில் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக 11ஆம் வகுப்புக்கான வணிகவியல் தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால் , நேற்று முன் தினமே அதற்கான வினாத்தாள் வெளியானது தெரிய வந்துள்ளது. மேலும், இன்று கம்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் வெளியானதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.