அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: செங்கோட்டையன்!

கல்வி சற்றுமுன் தமிழகம்
sencottaian-3

கொரோனா வைரஸ் காரணமாக தடுக்க நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழக அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தற்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை எனவும் தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.